8 Shape Walking: எட்டு போட்டு நடந்தா, 80 வயசுக்கு மேல வாழலாம்! எப்படினு பாருங்க

  • SHARE
  • FOLLOW
8 Shape Walking: எட்டு போட்டு நடந்தா, 80 வயசுக்கு மேல வாழலாம்! எப்படினு பாருங்க

இதனைத் தவிர்க்க உடலை அசைப்பது அவசியமாகிறது. உட்கார்ந்த நேரத்தின் இடைவெளியில் உடலை அசைப்பது உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நடைபயிற்சியில் 8-வடிவ நடைபயிற்சியை உடற்பயிற்சி வழக்கத்தில் முயற்சி செய்யலாம். இது ஒரு எளிய பயிற்சியாகும். அதாவது இந்த பயிற்சியில் ஒரு கற்பனையான 8-வடிவ உருவப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். இந்த 8-வடிவ நடைபயிற்சி இரத்த அழுத்தம் மற்றும் செரிமானம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது. இதில் 8-வடிவ நடைபயிற்சி மற்றும் அதை எவ்வாறு சரியாக செய்யலாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Stretches: உடல் எடையைக் குறைக்க உதவும் சிம்பிளான ஸ்ட்ரெட்சஸ்!

8 வடிவ நடைபயிற்சி

8 வடிவ நடைபயிற்சி சித்த நடை என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும் எளிய மற்றும் பயனுள்ள பயிற்சியாகக் கருதப்படுகிறஹ்டு. இந்த நடைபயிற்சி வடிவத்தில், நாம் நடக்கும் ஒவ்வொரு படிகள் கற்பனையான 8 வடிவ பாதையை உருவாக்க வேண்டும். ஆய்வு ஒன்றில், 8-வடிவ உடற்பயிற்சியில் செல்லும் போது, உடலைச் சற்றுத் திருப்பி, அந்த எட்டின் வளைவுகள் மற்றும் சுழல்களில் நடக்க வேண்டும்.

இந்த எளிய மாற்றம் நடைக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்ப்பதால் வெவ்வேறு தசைகளை ஈடுபடுத்துகிறது. இது வெவ்வேறு தசைகளை ஈடுபடுத்தவும், ஒருங்கிணைப்பைச் சேர்க்கவும் உதவுகிறது. இதில் மூட்டுகளில் எளிதான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உடற்பயிற்சியாகும். ஆனால், இது நல்ல முழு உடலுக்குப் பயிற்சியை அளிக்கிறது.

8- வடிவ நடைபயணத்தின் நன்மைகள்

8 வடிவ நடைபயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இந்த எட்டு வடிவ நடைபயிற்சி செய்வதன் நன்மைகளைக் காணலாம்.

உடல் எடை குறைய

8 வடிவ வடிவத்தில் நடப்பது உடல் எடையிழப்புக்கு உதவுகிறது. மேலும் இது தசை தொனி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நன்மைகளையும் வழங்குகிறது. 8 வடிவ வடிவில் நடப்பது உடலை வியர்க்கச் செய்யும். மேலும் நீண்ட நேரம் நடப்பது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. நடைபயிற்சி செய்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குவதன் மூலம், உடலில் அதிகப்படியான கொழுப்பு தங்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இது உடலுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் எடையிழப்புக்கு உதவுகிறது.

வலியைக் குறைக்க

ஆய்வு ஒன்றில், 8 வடிவ நடைபயிற்சி செய்வது கீல்வாதம் மற்றும் முழங்கால் வலியைப் போக்க உதவுகிறது. இந்த மிதமான முறுக்கு இயக்கம் உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கவும் ஏதுவாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breathing Exercise: இந்த வகை மூச்சுப் பயிற்சியை செய்து பாருங்க! டக்குனு எடை குறைஞ்சிடும்

தசை ஈடுபாட்டை அதிகரிக்க

நேர்க்கோட்டில் நடப்பதை விட, 8 வடிவ பாதை நடப்பது உடலில் அதிக தசைகள் வேலை செய்கிறது. இந்த திருப்பங்கள், வயிறு மற்றும் முதுகில் உள்ள முக்கிய தசைகளை ஈடுபடுத்துகிறது. இது உடலின் தோரணை மற்றும் நிலைத் தன்மையை ஊக்குவிக்கிறது. 8-வடிவ நடைபயிற்சியில் வளைவுகளில் செல்லும்போது வெவ்வேறு தசைக் குழுக்கள் வேலை செய்யப்படுகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க

ஆய்வு ஒன்றில் நடைபயிற்சி செய்வது இதயத்திற்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது இதயம் மிகவும் கடினமாக வேலை செய்வதைத் தடுக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த 8-வடிவ நடைபயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

ஒருங்கிணைப்பை மேம்படுத்த

8 வடிவ நடைப்பயிற்சி மனதை ஈடுபடுத்தி, ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. இந்தப் பயிற்சியில் ஒரே நேரத்தில் வெவ்வேறு தசைக் குழுக்களைப் பயன்படுத்தும் போது, திருப்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த சமநிலை மற்றும் சுறுசுறுப்புக்கு உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க

நடைபயிற்சி செய்வது ஒரு பயனுள்ள குறுகிய கால மன அழுத்த மேலாண்மை முறையாக செயல்படுகிறது. ஆய்வின் படி, மனம் தளர்வடைய நடைபயிற்சி மிகவும் பயனுள்ள தேர்வாக அமைகிறது. 8-வடிவ நடைபாதையை பராமரிக்க, நடக்கும் போது கவனம் தேவைப்படுவது தியானத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இது நம் அன்றாட வாழ்வில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இவ்வாறு 8-வடிவ நடைபயிற்சி செய்வது உடல் எடையைக் குறைப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இவை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Walking Backwards Benefits: நீங்க பின்னோக்கி நடந்துருக்கீங்களா? இத பார்த்தா கண்டிப்பா நடப்பீங்க

Image Source: Freepik

Read Next

Walking For Back Pain: வாக்கிங் செல்வது முதுகு வலியை குணப்படுத்துமா? ஆய்வு சொல்லும் உண்மை

Disclaimer