Best Stretching Exercises For Weight Loss: இன்று பலரும் உட்கார்ந்த வாழ்க்கையை முறையை அனுபவிப்பதால், உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உடல் எடையைக் குறைக்க சில எளிய நீட்சிப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தினந்தோறும் காலையில் சில எளிய நீட்டிப்புகளுடன் நாளைத் தொடங்குவது எடை இழப்புப் பயணத்திற்கு உதவுகிறது.
காலை நேரத்தில் நீட்சி பயிற்சி செய்வது நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதற்கும் காயத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும், இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. எடை இழப்பு முயற்சிக்கு காலை நேரத்தில் செய்ய வேண்டிய சில நீட்சிப் பயிற்சிகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Arm Fat Exercise: கஷ்டமே வேணாம்! கை சதை குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க
உடல் எடையைக் குறைக்க உதவும் நீட்சிப் பயிற்சிகள்
முன்னோக்கி மடிப்பு (Forward Fold)
இந்த நீட்சியானது தொடை எலும்புகள் மற்றும் கீழ் முதுகில் நீட்டுவதற்கு சிறந்ததாகும். யோகா சிகிச்சையின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் முன்னோக்கி மடிப்புகளின் வழக்கமான பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பயிற்சி செய்ய, கால்களை இடுப்பு அகலத்தில் வைத்து நிற்க வேண்டும். பின் மெதுவாக, இடுப்பில் இருந்து முன்னோக்கி மடித்து, முதுகை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் தலை மற்றும் கழுத்தை ஓய்வெடுக்க வைத்து, முழங்கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆழமாக சுவாசித்து 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை இந்த நீட்டிப்பை செய்யலாம்.
கீழ்நோக்கி எதிர்கொள்ளும் போஸ் (Downward Facing Dog)
கீழ்நோக்கி எதிர்கொள்ளும் இந்த நீட்சிப்பயிற்சியானது தொடை எலும்புகள், தோள்கள் மற்றும் முதுகு ஆகியவற்றைக் குறிவைக்கும் ஒரு முழு-உடல் நீட்டிப்பாகும். ஜர்னல் ஆஃப் பாடிவொர்க் அண்ட் மூவ்மென்ட் தெரபிஸில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், Downward Facing Dog-ன் வழக்கமான பயிற்சியானது உடலின் பின்புற தசைகளில் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
இந்த ஸ்ட்ரெட்சிங் செய்ய, முதலில் கைகள் மற்றும் முழங்கால்களைத் தரையில் வைக்க வேண்டும். பின் இடுப்பை உச்சவரம்பு நோக்கி உயர்த்த வேண்டும். இந்த அமைப்பானது தலைகீழ் V வடிவத்தில் தோன்றும். இவ்வாறு முதுகெலும்பை நீளமாக வைத்திருக்கும் போது, கைகளை தரையில் அழுத்த வேண்டும். இந்நிலையில் குதிகால்களை தரையை நோக்கி அழுத்தில், ஆழமாக சுவாசித்து 30 விநாடிகள் முதல்1 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Exercise Tips: உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா? நிபுணர்கள் கருத்து
நிற்கும் பக்க நீட்டிப்பு (Standing Side Stretch)
இந்த ஸ்ட்ரெட்சிங் ஆனது உடலின் பக்கங்களை குறிவைக்கிறது. ஜர்னல் ஆஃப் பிசிகல் தெரபி சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் இண்டர்கோஸ்டல் தசைகளை நீட்டுவது நுரையீரல் செயல்பாடு மற்றும் சுவாச செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
நிற்கும் பக்க நீட்டிப்பில் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்துக்கொண்டு, பின் கைகளை மேலே உயர்த்திக் கொண்டு கைகளை ஒன்றகப் பற்றிக் கொள்ள வேண்டும். பிறகு, வலது பக்கம் சாய்ந்து, இடுப்பை சதுரமாகவும், தோள்களை உங்கள் காதுகளில் இருந்து தளர்த்தவும் வேண்டும். இந்த நீட்டிப்பை 30 விநாடிகள் வைத்திருந்து, பின்னர் இடது பக்கத்தில் மீண்டும் செய்ய வேண்டும்.
கேட்-கௌ போஸ் (Cat-Cow Pose)
இது இரண்டு போஸ்களுக்கு இடையில் ஒரு மென்மையான ஓட்டமாகும். இது உடலை வெப்பமாக வைக்க உதவுகிறது. மேலும் முதுகெலும்புக்கு நெகிழ்வுத்தன்மையைத் தருகிறது. Cat Cow Pose-ன் நீட்சியின் வழக்கமான பயிற்சி முதுகெலும்பு ஓய்வுத் தன்மையை மேம்படுத்தவும், முதுகுவலியைக் குறைக்கவும் உதவுகிறது.
இதில் கைகள் மற்றும் முழங்கால்களைத் தரையில் ஊன்றி வைக்க வேண்டும். பிறகு மணிக்கட்டுகளை நேரடியாக தோள்களின் கீழ் மற்றும் முழங்கால்களை நேரடியாக இடுப்புக்கு கீழ் வைக்க வேண்டும். பிறகு முதுகை வளைத்துக் கொண்டு கூரையை நோக்கி மேலா பார்க்குமாறு வைத்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு முதுகுத்தண்டை சுற்றியபடி மூச்சை வெளியே விட வேண்டும். பிறகு 10-15 சுவாசங்களை செய்ய வேண்டும்.
இந்த ஸ்ட்ரெட்சிங் பயிற்சியை தினந்தோறும் செய்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Walking Benefits: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடந்தா, இந்த பிரச்சனை வரவே வராதாம்!
Image Source: Freepik