Exercise Tips: உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். இதன் காரணமாக, எடை பராமரிக்கப்படுகிறது, சுறுசுறுப்பான உணர்வு உள்ளிட்டவைகளுடன் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் உணவை உட்கொள்வது அவசியம். ஆனால் இந்த உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இப்படி செய்தால்தான் உடல் பயிற்சியின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.
பலர் உடற்பயிற்சிகளுக்கு இடையில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கிறார்கள். ஏனென்றால் அது அவர்களை கனமாக உணர வைப்பதாக நம்புகிறார்கள். இதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும், உடற்பயிற்சி செய்யும் போது இடையில் தண்ணீர் குடிக்கலாமா, வேண்டாமா என்று.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் உள்ள தகவலை பார்க்கலாம்.
உடற்பயிற்சிகளுக்கு இடையில் தண்ணீர் குடிப்பது நல்லதா?
உடற்பயிற்சிகளுக்கு இடையில் தண்ணீர் குடிப்பதும் அவசியம். நீங்கள் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. உடற்பயிற்சியின் போது உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. தண்ணீர் குடிக்கும் போது வெப்பநிலை சாதாரணமாக மாறும்.
அதேபோல் தண்ணீர் குடிப்பது உங்கள் இதயத் துடிப்பை சிறப்பாக வைத்திருக்கும். சிறந்த இதயத் துடிப்பு காரணமாக, நீங்கள் உடற்பயிற்சிகளை சரியாகச் செய்ய முடியும். எனவே, உடற்பயிற்சிகளுக்கு இடையில் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவது அவசியம்.
உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உடலில் ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்
தண்ணீர் குடிப்பதாலும் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதன் மூலம், நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் மயக்கம், வாந்தி, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். இது தவிர, உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
உடல் வெப்பநிலை சிறப்பாக இருக்கும்
உடற்பயிற்சிகளுக்கு இடையே தண்ணீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். இதனால் நீங்கள் நிம்மதியாக உணர்கிறீர்கள். மேலும், வெப்பத்தால் ஏற்படும் பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
கலோரி உட்கொள்ளல் குறையும்
உடற்பயிற்சிக்கு பிறகு நாம் வேகமாக பசியுடன் உணர்கிறோம். ஆனால் உடற்பயிற்சிகளுக்கு இடையில் தொடர்ந்து தண்ணீர் குடித்தால், அது உங்கள் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதன் மூலம் நீங்கள் கலோரி உட்கொள்ளலையும் குறைக்கலாம்.
சருமம் பளபளப்பாகும்
உடற்பயிற்சிகளுக்கு இடையில் தண்ணீர் குடிப்பதால் சருமம் சுத்தமாகும். இதனால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
உடற்பயிற்சிகளுக்கு இடையில் எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்?
உடற்பயிற்சிகளுக்கு இடையில் சிறிது சிறிதாக தண்ணீர் குடிக்க வேண்டும். சாதாரண தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த நீரை குடிப்பது நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் எளிதில் ஜீரணமாகி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இது தவிர, உடற்பயிற்சி செய்த பிறகும் தண்ணீர் குடிப்பது அவசியம், இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
இவை பொதுவான தகவல்களே ஆகும். ஒவ்வொரு உடல்நிலை பொறுத்தும் இந்த நிலை மாறுபடும். உங்கள் நிபுணரின் ஆலோசனையும் கருத்தில் கொள்வது நல்லது.
Image Source: FreePik