Weight Loss Tips: எதுவும் செய்யக்கூடாது.. ஆனா உடம்பு குறையுனுமா.! சூப்பர் டிப்ஸ் இதோ..

  • SHARE
  • FOLLOW
Weight Loss Tips: எதுவும் செய்யக்கூடாது.. ஆனா உடம்பு குறையுனுமா.! சூப்பர் டிப்ஸ் இதோ..

உடல் எடையை குறைக்க டயட் இருப்பது, உடற்பயிற்சி செய்வது என்று பல முயற்சிகளில் ஈடுபடுவர். ஆனால் வேலை சுமை காரணமாக சிலர் இது போன்ற செயல்களின் ஈடுபட முடியாமல் போகும். இத்தகைய சூழலில், உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி? என்ற கேள்வி மக்களிடையே தோன்றும். இதற்கான விளக்கத்தை நாங்கள் சொல்கிறோம். இதை ட்ரை பண்ணி பாருங்க. 

உணவில் கவனம்

எடையை குறைக்க விரும்புபவர்கள், குப்பை உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்யவும். குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மீது கவனம் செலுத்தவும். 

இதையும் படிங்க: ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

மென்று முழுங்கவும்

உணவுகளை அவசர அவசரமாக உட்கொள்ளாமல், நன்கு மென்று முழுங்கவும். இது செரிமானத்தை எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நீங்கும். 

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். 

நல்ல தூக்கம்

உணவு உட்கொண்ட உடனே தூங்க வேண்டாம். இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். மேலும் இது எடையை அதிகரிக்கச் செய்யும். முடிந்த வரை 7 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். பின் 2 மணி நேரம் கழித்து தூங்கவும்.

Image Source: Freepik

Read Next

Fruits For Weightloss: சட்டென உடல் எடையை குறைக்கனுமா?… இந்த 3 பழங்களை தினமும் சாப்பிடுங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்