உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. அனைவரும் பயிற்சி செய்யக்கூடிய சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
ஆண்டுதோறும் புத்தாண்டு பிறக்கும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும், தினமும் ஜிம்மிற்கு சென்று வொர்க் அவுட் செய்ய வேண்டும் என தீர்மானம் செய்வோம். ஆனால் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி, டயட், யோகா என எதை செய்தாலும்… அதிகபட்சம் பலராலும் 3 மாதங்கள் கூட தொடர முடியாமல் போகிறது. சிலர் ஒரு மாதத்தில் கூட தங்களது வெயிட் லாஸ் ஜார்னியை கைவிடுகிறார்கள்.
முக்கிய கட்டுரைகள்
ஆனால் உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையை குறைக்க வழிகள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிகளை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்…
உணவில் கவனம் செலுத்துங்கள்:
நாம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், நாம் உண்ணும் உணவு சரியாக இல்லாவிட்டால், அது உண்மையில் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே நாம் சாப்பிடும் போது கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
இண்டர் ஃபாஸ்டிங் எனப்படும் டயட் முறையை பின்பற்றலாம். இந்த டயட் முறைப்படி 16 மணி நேரம் எவ்வித உணவையும் சாப்பிடாலும், வெறும் 8 மணி நேரம் மட்டும் உணவு சாப்பிட்டும் உங்கள் டயட்டை கடைபிடிக்கலாம். இந்த முறை உங்கள் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கறைக்க உதவுகிறது.
லைஃப் ஸ்டைல் மாற்றங்கள்:
நம் வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்துவது நல்லது. குறிப்பாக ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும், ஒரே நேரத்தில் எழுந்திருப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மனஅழுத்தம் அதிகமாக இருந்தால், அதைக் குறைப்பதும் நல்லது. இவை அனைத்தும் ஹார்மோன் மாற்றங்களைத் தடுக்க உதவும். அதேபோல, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.
சுறுசுறுப்பாக இருங்கள்:
உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், தினமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நடக்கக்கூடிய இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். அதேபோல், லிஃப்டில் செல்வதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் செல்வது உடற்பயிற்சியின் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
அதேபோல், மாலையில் நடைபயிற்சி செல்வது நல்லது. நடனமாடுவது அல்லது உங்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடுவது என உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பழகுங்கள்.
சமைக்கும் முறை:
உணவை சமைக்கும் போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல, அதிக எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஜாக்கிரதை… சாப்பிட்ட பிறகு சோடா குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பருப்புகள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உண்ணலாம்.
மருத்து ஆலோசனை:
பெரும்பாலும் நமக்குள் ஏற்படும் சில நோய்களால் உடல் எடை கூடும். அதேபோல, நாம் உட்கொள்ளும் சில மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, எடை அதிகரித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
ImageSource: Freepik