Best time to drink ginger water: குளிர்காலத்தில் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகரிக்கிறது. இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மக்கள் பெரும்பாலும் இஞ்சியை தேநீர், சாலட், டீ மற்றும் காய்கறி ஜூஸ் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
இஞ்சியை எப்படி சாப்பிட்டாலும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக குளிர்காலத்தில் இஞ்சி நீரைக் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குளிர்காலத்தில் இஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss: 15 நாளில் உடல் எடையை குறைக்க தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க!
குளிர்காலத்தில் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இதய ஆரோக்கியம்
இஞ்சி சூப்பர்ஃபுட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில், உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குளிர்காலத்தில் இஞ்சி தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. நின்றாள், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இஞ்சியில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. குளிர்ந்த காலத்தில் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், நீங்கள் குளிர்காலம் தொடர்பான நோய்களுக்கு பலியாகலாம். இந்நிலையில், இஞ்சி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற நோய்களைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss: வெறும் 7 நாளில் தொப்பை குறைய இந்த பானத்தை தினமும் குடியுங்க!!
எடையை கட்டுப்படுத்தும்
பெரும்பாலானோரின் எடை குளிர்காலத்தில் அதிகரிக்கிறது. எனவே, இஞ்சி நீர் எடையைக் குறைக்க உதவும். உடல் கொழுப்பைக் குறைக்கும் தெர்மோஜெனிக் பண்புகளை இஞ்சி கொண்டுள்ளது.
அழற்சி எதிர்ப்பு
இஞ்சி தண்ணீரை குடிப்பதன் மூலம், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். இஞ்சி நீர் உங்கள் இரத்தத்தில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : இஞ்சி முதல் சோம்பு வரை.. தொப்பையை குறைக்கும் மூலிகைகள் இங்கே..
இஞ்சி நீர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

இஞ்சி தண்ணீர் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை எடுத்து, அதில் 1 அங்குல துண்டு இஞ்சியை அரைத்து அல்லது நசுக்கி சேர்க்கவும். இந்த நீரை குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும், பின்னர் அது ஆறிய பிறகு வடிகட்டவும். உங்கள் இஞ்சி தண்ணீர் தயார். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.
Pic Courtesy: Freepik