Ways To Eat Pumpkin For Weight Loss: நவீன வாழ்க்கை முறையில் மோசமான உணவு முறை மற்றும் சில பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகமாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகி வருகிறது. நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு முதன்மையான காரணமாக விளங்குவது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பே காரணமாகும். உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
அதன் படி, உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகளில் ஒன்றாக பூசணிக்காயும் ஒன்று. பெரும்பலானோர் பூசணிக்காயை அன்றாட உணவு வகைகளில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கின்றனர். ஆனால், இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடை குறைய பூசணிக்காயை எப்படி உட்கொள்ளலாம் என்பது குறித்து இதில் காணலாம்.
பூசணிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்
வைட்டமின் ஏ, பி, ஈ, டி, இரும்பு, தாமிரம், நார்ச்சத்துக்கள், பீட்டா கரோட்டின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்துக்களை பூசணிக்காய் கொண்டுள்ளது. இவற்றை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மையைத் தரும். மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. MyHealthBuddy-ன் உணவியல் நிபுணர் Antara Debnath அவர்களின் கூற்றுப்படி, “உடல் எடையைக் குறைக்க பூசணி மிகுந்த பலனளிக்கும். இதில் அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால், இவை வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இது குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால் உடல் பருமனை விரைவாகக் கட்டுப்படுத்த உதவுகிறது.” உடல் எடையைக் குறைக்க பூசணிக்காயை எப்படி உட்கொள்ளலாம் என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Gain Tips: எவ்ளோ ஒல்லியாக இருந்தாலும் உடனே எடை அதிகரிக்க அரிசியை இப்படி சாப்பிடுங்க
உடல் எடை குறைய பூசணிக்காயை எப்படி உட்கொள்வது?
பூசணிக்காயை பல்வேறு வழிகளில் உட்கொள்வதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்க முடியும்.
பூசணி கறி
பூசணி காய்கறிகளை வதக்கி உட்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதில் பூசணி கறி எப்படி செய்வது காண்போம்.
- முதலில் பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாய் ஒன்றில் 1 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் சீரகம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய பூசணிக்காயை சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு, அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கி, காய்கறிகள் வெந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.
- இதை மதியம் மற்றும் இரவு உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
பூசணி கறியைத் தினமும் உட்கொள்வதன் மூலம், உடல் எடை படிப்படியாகக் குறைவதைக் காணலாம்.
பூசணி சூப்
உடல் எடையைக் குறைக்க உதவும் சூப் வகைகளில் பூசணி சூப் வகையும் அடங்கும்.
- பூசணி சூப் செய்ய முதலில் பூசணிக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- இதை வேகவைத்து, பிளெண்டர் உதவியுடன் கலக்க வேண்டும்.
- கடாய் ஒன்றில் சிறிது நெய்யை சூடாக்கி, அதில் சீரகம் அல்லது கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- பின் இதில் பூசணிக்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும். இதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு சிட்டிகை அளவு கருப்பு மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த வழியில் பூசணி சூப்பைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
பூசணி சிப்ஸ்
மாலை நேர திண்பண்டமாக, பூசணி சிப்ஸை எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையைக் குறைக்க வழிவகுக்கிறது.
- முதலில் பூசணிக்காயை தோலுரித்து, மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- இதில், சாட் மசாலா, உப்பு, சிவப்பு மிளகாய் தூள் அல்லது மசாலா சேர்க்கவும், பின் இதை நன்றாக வேகும் வரை சுட வேண்டும்.
இந்த ஆரோக்கியமான பூசணி சிப்ஸை எடுத்துக் கொள்வது உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Amla Powder For Weight Loss: தொப்பை சீக்கிரம் குறைய ஆம்லா பொடியை இப்படி பயன்படுத்துங்க.
பூசணி சாறு
இது எடை இழப்புக்கு சிறந்த தேர்வாகும்.
- இதில் முதலில் பூசணிக்காயை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதில் விரும்பினால் கேரட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு, உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.
தினமும் காலையில் காலை உணவாக பூசணி சாற்றை எடுத்துக் கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் உடல் எடையை விரைவாகக் குறைக்கிறது.
இந்த வழிகளில் பூசணிக்காயை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம். எனினும், ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பின், பூசணிக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இதனுடன், உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியாமான உணவுகளுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கையாள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fennel Seeds Benefits: ஆஹா! எடையை வேகமா குறைக்க இந்த ஒரு விதை போதுமா? இது தெரியாம போச்சே..
Image Source: Freepik