Expert

Masoor Dal For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Masoor Dal For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க

உடல் எடையைக் குறைக்க உணவு முறையைக் கையாள்வது மிக முக்கியமானதாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதில் உணவியல் நிபுணர் ரிப்சி அரோரா அவர்களின் கூற்றுப்படி, உடல் பருமனைக் கட்டுப்படுத்த மசூர் பருப்பு உதவுகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க மசூர் பருப்பு தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds For Weight Loss: வேகமா உடல் எடையைக் குறைக்க இந்த விதைகளை எடுத்துக்கோங்க

உடல் எடையைக் குறைக்க மசூர் பருப்பு தரும் நன்மைகள்

மசூர் பருப்பு உட்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதில் உடல் எடையைக் குறைக்க மசூர் பருப்பின் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பசியைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த சூழ்நிலையில், உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

குறைக்கப்பட்ட கலோரி உட்கொள்ளல்

மற்ற பருப்பு வகைகளுடன் ஒப்பிடுகையில் மசூர் பருப்பில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. இது கலோரிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள அதிகளவு புரதச்சத்துக்கள் எடை இழக்க விரும்புவோர்க்கு சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த புரதச்சத்துகள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

இரும்புச்சத்து நிறைந்த

இரும்புச்சத்து குறைபாடு உண்டாவது சோர்வு மற்றும் குறைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளை ஏற்படுத்தும். இது எடையிழப்பைத் தடுக்கும் காரணியாக அமைகிறது. பருப்பு வகைகளி இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதனுடன் தக்காளி அல்லது சிட்ரஸ் பழங்கள் போன்ற வைட்டமின் சி நிறைந்தவற்றுடன் உட்கொள்வது உடல் எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Spinach For Weight Loss: உடல் எடையைக் குறைக்க கீரையை இப்படி சாப்பிடுங்க

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

மசூர் பருப்பில் ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இது பல்வேறு வழிகளில் எடை இழப்புக்கு உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ்

உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு வேகமாக அதிகரிக்கும் என்பது கிளைசெமிக் குறியீட்டால் அளவிடப்படுகிறது. குறைந்த கிளைசெமிக் உணவுகள் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. இதனால் ஆற்றல் நிலைகள் பராமரிக்கப்பட்டு உடல் எடை குறைக்கப்படுகிறது.

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். குறிப்பாக நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips : உடல் எடையை சட்டுனு குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க!

Image Source: Freepik

Read Next

Weight Loss Superfoods: ஆரஞ்சு, ஆப்பிளை விட வேகமாக எடையை குறைக்க உதவும் பழங்கள்!!

Disclaimer