$
Banana For Weight Loss: செரிமானம், உடல் எடை ஆரோக்கியம் என அனைத்திற்கும் பலனளிக்கும் பழம் வாழைப்பழம். ஏழைகளுக்கான ஆப்பிள் என்றே வாழைப்பழத்தை சொல்லலாம். விலையுயர்ந்த பழமான ஆப்பிள் இன்றளவும் பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஆனால் திரும்பும் திசையெல்லாம் கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளை பலரும் அறிந்திருப்பதில்லை.
உடல் எடையை குறைக்க உதவும் வாழைப்பழம்
எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மற்றும் பால் கொடுப்பதால், அவர்கள் உடல் பருமனாக மாறுவார்கள். எனவே வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதான் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் உடல் எடை குறைப்புக்கு வாழைப்பழம் தான் அரிய வகை பழம் என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.
வாழைப்பழம் உடல் எடையை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உடல் எடையை குறைக்க வாழைப்பழத்தை எவ்வாறு உட்கொள்வது, அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வேகவைத்த வாழைப்பழம்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வேகவைத்த வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தை சாப்பிடும் முன் ஆவியில் வேகவைத்து பின் சாப்பிட வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
வயிற்றுக்கு நிறைவான உணர்வு
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. எனவே இதை சாப்பிடுவதால் விரைவில் பசி ஏற்படாது. வாழைப்பழம் மற்றும் பால் கலந்து சாப்பிடுவது கூடுதல் சிறப்பு. இதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் விரைவில் பசி ஏற்படாமல் வயிறுக்கு நிறைவான உணர்வை கொடுக்கும்.
உடல் எடையை குறைக்க எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டும்?
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி இரண்டு வாழைப்பழம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிக வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க நேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழ ஆரோக்கிய நன்மைகள்
வாழைப்பழத்தில் கலோரிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயிற்றை நிரப்புகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இதன் மூலம் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், ஃபோலேட் போன்றவை நிறைந்துள்ளது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். வாழைப்பழத்தில் உள்ள இந்த சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது, உடற்பயிற்சி செய்து சோர்வாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது உடனடி ஆற்றலை அளிக்கிறது.
உடல் எடையை எளிதாக குறைக்கலாம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் உடலை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது அதிக கலோரிகளை எரிக்கவும் முடியும். இது தவிர, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிடுவது ஆகச்சிறந்த நன்மை பயக்கும்.
இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றாலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து இந்த பரிந்துரையை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர் அல்லது தகுந்த ஆலோசகரின் பரிந்துரையை பெறுவது அவசியம்.
Pic Courtesy: FreePik