$
How to lose weight without diet or exercise: தற்போதைய காலத்தில் ஐந்தில் மூவர் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. ஒவ்வொருவரும் தங்கள் உடல் எடையை குறைக்க பல விஷயங்களை பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக டயட்டைப் பின்பற்றுகிறார்கள்.
டயட்டை பின்பற்றினால் எளிமையாக உடல் எடையை குறைக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. ஆனால், உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு மாதத்தில் 5 முதல் 7 கிலோ வரை எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? வாயை கட்டாமல் உடல் எடையை குறைக்க இந்த நடவடிக்கைகளை முயற்சி செய்தால் போதும். உடல் எடையை எளிமையாக குறைக்கலாம்.
டயட் பின்பற்றாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

உணவுத் திட்டத்தைப் பின்பற்றாமல் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், மற்றவர்கள் எப்படி சமைக்கிறார்களோ, அதே மாதிரி உணவைச் சமைக்க வேண்டும். ஆனால், சமையலுக்கு எண்ணெயை மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். உங்கள் உணவில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்களுக்கு மேல் எண்ணெய் இருக்கக்கூடாது.
உடல் எடையை குறைக்க உங்கள் உணவு தட்டை இப்படி தயார் செய்ய வேண்டும். உங்கள் தட்டில் பாதி காய்கறிகள் இருக்க வேண்டும். தட்டில் வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி போன்ற சாலட்களை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும். மேலும், 1/4 தட்டு புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் தாவர அடிப்படையிலான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
அசைவம் உண்பவராக இருந்தால் சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். புரதத்தை உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். அரிசி போன்ற கார்போஹைட்ரேட்டுகளை 1/4 பங்கு மட்டுமே எடுக்கவும்.இப்படி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு வேலை 380 கலோரிகளை மட்டுமே சாப்பிடுவீர்கள்.

அதே நேரம் உணவு கட்டுப்பாடு உங்கள் எடையை விரைவாகக் குறைக்கும். உணவு உண்ணும் போதெல்லாம், உணவை சிறிய பகுதிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, முடிந்தவரை வெளி உணவுகளில் இருந்து விலகி இருங்கள். உங்கள் தட்டில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் வையுங்கள். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் எடையைக் குறைக்க உதவும்.
உங்கள் உணவில் இருந்து சர்க்கரைப் பொருட்களைக் குறைக்கவும். ஏனெனில், சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் அதிக கலோரிகள் இருப்பதால் எடை அதிகரிக்கும்.
Pic Courtesy: Freepik