Rapid Weight Loss: மிக வேகமாக உடல் எடையை குறைப்பதால் என்ன ஆகும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Rapid Weight Loss: மிக வேகமாக உடல் எடையை குறைப்பதால் என்ன ஆகும் தெரியுமா?


Side Effects Of Rapid Weight Loss: சிலர் உடல் எடையை வேகமாக குறைக்கும் நோக்கில் தீவிர பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த வரிசையில், நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்து, திறனுக்கு அப்பாற்பட்ட எடையை தூக்குகிறார்கள். அதோடு உணவையும் குறைக்கிறார்கள்.

இதனால் ஹார்மோன்களில் வேறுபாடு ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மிக வேகமாக உடல் எடையை குறைப்பதால் என்ன ஆகும் என்பதை இங்கே காண்போம்.

வளர்சிதை மாற்ற விகிதம் குறைகிறது

விரைவான எடை இழப்பு செயல்முறை உங்கள் வளர்சிதை மாற்றத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினசரி அடிப்படையில் மிகக் குறைவான கலோரிகளை உட்கொள்வது, குறிப்பாக எடை இழப்புக்கு, வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைக்கிறது. இதனால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படலாம்.

தசை இழப்பு

விரைவாக உடல் எடையை குறைக்க குறைந்த கலோரி உணவை உட்கொள்கிறார்கள். இது கொழுப்பு இழப்பை விட தசையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தசைகளின் அளவு குறைந்து எலும்புகள் பலவீனமடைவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், எளிதில் உடையும் வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படிங்க: முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

ஊட்டச்சத்து குறைபாடு

உடல் எடையை வேகமாகக் குறைக்க நீங்கள் பேஷன் டயட்டைப் பின்பற்றினால், அது உங்கள் உடலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது மற்றும் ஈரப்பதத்தின் அளவை இழக்கும் அபாயமும் அதிகம். எனவே ஊட்டச்சத்தை முற்றிலும் புறக்கணிக்காமல் சரிவிகித உணவை திட்டமிட்டு பின்பற்றுவது நல்லது.

மனச்சோர்வு

விரைவான எடை இழப்பு மற்றும் மெலிதானது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆனால், இது மனச்சோர்வு அபாயத்தை அதிகரிக்கிறது. விரைவான எடை குறைவினால், கவலை மற்றும் மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். இது நீண்ட காலத்திற்கு இதயம் மற்றும் மூளை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

பித்தப்பை கற்கள்

உடல் எடையை குறைக்கும் போது சரியான உணவை சாப்பிடாமல் இருந்தால், பித்தப்பையில் கற்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே விரைவாக உடல் எடையை குறைப்பதை விட மெதுவாகவும் ஆரோக்கியமாகவும் உடல் எடையை குறைப்பது நல்லது.

தோல் பிரச்னைகள்

நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அது சரும பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக எதிர்பாராத விதமாக அதிக அளவு எடை குறையும் போது தோல் சுருக்கம் மற்றும் நீட்சி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் தோல் தொங்கும். அழகற்ற தோற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். தோலில் ஆங்காங்கே ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Image Source: Freepik

Read Next

இது ஒன்னு மட்டும் சாப்பிடுங்க. நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு வெயிட் குறையும்

Disclaimer

குறிச்சொற்கள்