Ways To Eat Kidney Beans For Weight Loss: ராஜ்மா அல்லது கிட்னி பீன்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நீக்க கிட்னி பீன்ஸ் உதவுகிறது. கிட்னி பீன்ஸில் பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள், நார்ச்சத்து, சோடியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. இதனை உட்கொள்வது உடல் பலவீனத்தை நீங்கி வயிறு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
கிட்னி பீன்ஸில் அதிகளவிலான புரதம் நிறைந்துள்ளது. இது வயிறு நிரம்பிய முழுமையான உணர்வைத் தருகிறது. இதை அரிசியுடன் சாப்பிடாமல் அப்படியே சாப்பிடுவது உடலில் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. கிட்னி பீன்ஸ் உட்கொள்வது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. கிட்னி பீன்ஸில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை இழக்க கிட்னி பீன்ஸ் எடுத்துக் கொள்ளும் முறை குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Masoor Dal For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க
உடல் எடை குறைய கிட்னி பீன்ஸ் எடுத்துக் கொள்ளும் முறை
உடல் எடையைக் குறைக்க கிட்னி பீன்ஸைப் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அதில் சிலவற்றைக் காண்போம்.
ராஜ்மா சூப்
உடலில் கொழுப்பைக் குறைக்க கிட்னி பீன்ஸ் சூப் எடுத்துக் கொள்ளலாம். இது வயிறு சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதில் சூப் தயார் செய்ய ராஜ்மாவில் அதிக தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த வேகவைத்த கிட்னி பீன்ஸில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற சமைத்த காய்கறிகள் எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும். இதில் சூப் பரிமாறுவதற்கு முன்னதாக, கருமிளகு, உப்பு, கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்க்கலாம்.
கிட்னி பீன்ஸ் ரைட்டா
உடல் எடை குறைய கிட்னி பீன்ஸ் ரைட்டாவைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனை எடுத்துக் கொள்வது உடலை நீரேற்றமாக வைப்பதுடன், மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. மேலும் இது அமிலத்தன்மை பிரச்சனையிலிருந்து நிவாரனம் தருகிறது. ராஜ்மா ரைத்தா தயார் செய்ய ராஜ்மாவை வேகவைத்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பின், வெங்காயம், உப்பு, கருமிளகு போன்றவற்றைச் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Spinach For Weight Loss: உடல் எடையைக் குறைக்க கீரையை இப்படி சாப்பிடுங்க
கிட்னி பீன்ஸ் சாலட்
ராஜ்மாவை சாலட்டாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. ராஜ்மா சாலட் தயார் செய்ய, முதலில் ராஜ்மாவை 4 முதல் 5 மணி நேரம் வர ஊறவைத்து பின் கொதிக்க வைக்க வேண்டும். பின், இவ்வாறு வேகவைத்த பீன்ஸில் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட கிட்னி பீன்ஸை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
இந்த வழிகளில் பீன்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். எனினும், வேறு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Okra Water for Weight Loss: எப்பேற்பட்ட தொப்பையையும் குறைக்க உதவும் வெண்டைக்காய் நீர். இப்படி குடிச்சி பாருங்க
Image Source: Freepik