Expert

Spinach For Weight Loss: உடல் எடையைக் குறைக்க கீரையை இப்படி சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Spinach For Weight Loss: உடல் எடையைக் குறைக்க கீரையை இப்படி சாப்பிடுங்க

இந்த சூழ்நிலையில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரையில் பொட்டாசியம், சோடியம், நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. கீரையை உட்கொள்வது உடலில் உள்ள பலவீனத்தை நீக்கி கலோரி அளவைக் குறைக்கிறது. உடல் எடையைக் குறைக்க கீரையை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds For Weight Loss: வேகமா உடல் எடையைக் குறைக்க இந்த விதைகளை எடுத்துக்கோங்க

உடல் எடை குறைய கீரை பயன்படுத்தும் முறை

உடல் எடையைக் குறைக்க கீரை உதவுகிறது. இதில், எந்த வழிகளில் கீரையை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.

கீரை சாறு

உடல் எடையைக் குறைக்க காலை உணவாக கீரை சாறு எடுத்துக் கொள்ளலாம். இந்த சாறு ஆரோக்கியமானதுடன், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்கிறது. இந்த சாறு செய்ய, 1 முதல் 2 கேரட், சிறிது கீரை மற்றும் 1 அங்குல துண்டு இஞ்சி போன்றவற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கலாம். இந்த சாறு அருந்துவது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது தொப்பையைக் குறைக்கிறது.

கீரை ரொட்டி

சாதாரண மாவு ரொட்டிக்குப் பதிலாக, கீரை மாவு ரொட்டி சாப்பிடலாம். இந்த ரொட்டியைச் சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்துக்களை அதிகம் வழங்குகிறது. இந்த ரொட்டி செய்ய, கீரையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இப்போது 1 கப் அளவிலான கோதுமை மாவை எடுத்து நறுக்கிய கீரையைச் சேர்க்க வேண்டும். இதனுடன் உப்பு மற்றும் செலரி சேர்த்து மாவை பிசைய வேண்டும். இந்த மாவின் ரொட்டியைத் தயார் செய்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Bamboo Rice Benefits: உடல் எடையை சட்டுனு குறைக்க இந்த அரிசியை எடுத்துக்கோங்க

கீரை சூப்

உடல் எடையைக் குறைக்க கீரை சூப்பை எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கீரை சூப்பில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், வேகமாக கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்த சூப்பை எடுத்துக் கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இந்த சூப் செய்ய முதலில் கீரையை கழுவி லேசாக கொதிக்க வைக்க வேண்டும். இப்போது ஆறிய பின்னர் அரைக்க வேண்டும். பின்னர் கடாய் ஒன்றில் அதில் லேசான வெண்ணெய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் போன்றவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். இப்போது அரைத்த கீரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் வரை வதக்கி, பிறகு கொதிக்கும் போது உப்பு மற்றும் மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைக்க கீரையை மேலே கூறப்பட்ட வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். எனினும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் எவ்ளோ ஓவரான வெயிட்டையும் அசால்டாக குறைக்கும் கடுகு கீரை.!

Image Source: Freepik

Read Next

உடல் எடையை குறைக்க கோதுமை மட்டும் அல்ல; இந்த மாவிலும் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்!

Disclaimer