Are Mustard Greens Good For Weight Loss: இன்று பெரும்பாலானோர் மோசமான உணவுமுறை, உட்கார்ந்த வாழ்க்கைமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் பருமன் அதிகரித்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் விரைவாக எடை அதிகரிப்பதும், எடை வேகமாக குறையாமல் இருப்பதும் பொதுவானதாகும். இந்த பிரச்சனையைத் தீர்க்க குளிர்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுமுறைகளைக் கையாள வேண்டும்.
அதன் படி, குளிர்காலத்தில் உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவும் உணவுகளில் ஒன்றாக கடுகு கீரை அமைகிறது. இதன் கடுக்காய் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் உள்ள புரதம், கால்சியம், வைட்டமின் பி6, சி மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன. உடல் எடையைக் குறைக்க உதவும் கடுகு கீரை எடுத்துக் கொள்வதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்கணுமா? பூசணிக்காய் இப்படி சாப்பிட்டா போதும்.
ஏன் கடுகு கீரை?
கடுகு கீரையில் உள்ள ஊட்டச்ச்சத்துக்கள் பல்வேறு ஆரோக்கிய நலன்களைத் தருகின்றன. உடல் எடையை வேகமாகக் குறைக்கும் கடுகு கீரை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நார்ச்சத்து நிறைந்த
கடுகு கீரை அதிகளவிலான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நீண்ட நேரம் முழுமை உணர்வைத் தருவதால், பசி ஏற்படுவதைக் குறைக்கிறது. மேலும், நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்வது பசிக்கட்டுப்பாட்டுடன் செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
குறைந்த கலோரிகள்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குறைந்த கலோரிகள் அளவையே உண்பர். கடுகு கீரையில் கலோரி அளவு குறைவாக இருப்பதால், இதன் நுகர்வு உடல் எடையை வேகமாக அதிகரிக்காது. மேலும் கடுகு கீரையில் வைட்டமின் சி, ஏ, கே, கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளை பலப்படுத்தவும், உடலில் காணப்படும் பலவீனத்தை நீக்கவும் உதவுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
கடுகு கீரையில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் வீக்கம் மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது. கடுகு கீரையை உட்கொள்வதால் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தவும், உடலில் இருந்த இரத்த சோகையை நீக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Fennel Seeds Benefits: ஆஹா! எடையை வேகமா குறைக்க இந்த ஒரு விதை போதுமா? இது தெரியாம போச்சே..
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க
கடுகு கீரை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள மசாலா உடலில் உள்ள கலோரிகளைக் குறைப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதன் தெர்மோஜெனிக் பண்புகள் கலோரிகளை எரிக்கிறது.
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த
உடல் எடையை அதிகரிக்கும் காரணிகளில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்வதும் ஒன்றாகும். எனவே உடல் எடையைக் குறைக்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். கடுகு கீரையில் நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இவை இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுடன், நீண்ட நேரம் திருப்தி உணர்வைத் தருகிறது.
உடல் எடையைக் குறைக்க கடுகு கீரையை எடுத்துக் கொள்ளலாம். எனினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின் மருத்துவரை அணுகிய பின்னரே இதை உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் ஏறாம இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க.
Image Source: Freepik