பல நன்மைகளை அள்ளித்தரும் கீரை வகைகள்! குறிப்பா இந்த கீரைகளை மிஸ் பண்ணீடாதீங்க மக்களே

அன்றாட உணவில் கீரை வகைகளைச் சேர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். கீரைகளைப் பொறுத்த வரை ஏராளமான கீரை வகைகள் உள்ளன. இதில் கீரையின் வகைகளையும், அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பல நன்மைகளை அள்ளித்தரும் கீரை வகைகள்! குறிப்பா இந்த கீரைகளை மிஸ் பண்ணீடாதீங்க மக்களே


Which keerai is good for health: அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், பானங்கள், கீரைகள் போன்றவற்றைச் சேர்ப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இதில் கீரைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொதுவாக, கீரைகள் என்றாலே சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் ஓர் உணவுப்பொருள் என்று அனைவரும் தெரிந்ததே. எனவே தான் மருத்துவர்கள் தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். கீரைகளைப் பொறுத்தவரை ஏராளமான வகைகள் உள்ளன.

ஆனால், நம் அன்றாட உணவில் பாலக் கீரை, பசலை கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் சிறுகீரை போன்ற சில கீரை வகைகளை மட்டும் அதிகம் சாப்பிடுகிறோம். ஆனால், கீரைகளில் 100 கணக்கான கீரை வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில கீரை வகைகளைப் பற்றியும், அதன் சத்துக்கள் மற்றும் நன்மைகள் குறித்தும் இந்தப் பதிவில் காணலாம்.

கீரையின் ஊட்டச்சத்துக்கள்

கீரை என்றாலே இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கீரைகளில் இல்லாத கனிமச் சத்துக்களே இல்லை என்றும் சொல்லலாம். குறிப்பாக, ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டு உடலில் உள்ள பிரச்சினைகளுக்கு ஏற்றபடி கீரைகளை தேர்வு செய்து, தினம் ஒரு கீரையை உணவில் சேர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Spinach juice benefits: காலை எழுந்ததும் கீரை ஸ்மூத்தி குடிப்பதில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பசலைக் கீரை

பசலைக் கீரையில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எடையிழப்புக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த நார்ச்சத்துக்கள் மலச்சிகலைத் தடுக்கவும், குடல் இயக்கங்களை சீராக்கவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

பாலக்கீரை

பாலக் கீரை ஒரு சத்தான கீரை வகையாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இவை எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. இந்த கீரை எளிதில் செரிமானம் அடைவதுடன், எரிச்சலைத் தணிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

சிறுகீரை

சிறுகீரையில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சிறுநீரக பிரச்சனைகளைப் போக்குவதற்கும், சிறுநீரகக் கற்களை நீக்குவதற்கும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அரைக்கீரை

இது ஒரு சத்தான கீரை வகையாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளைப் போக்குவதற்கு உதவுகிறது. குறிப்பாக, இது இரும்புச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவை செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும் இது கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்றதாகும். உடல் பருமன், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் அரைக்கீரையைத் தாராளமாக சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Agathi Keerai Benefits: மனித ஆயுளையே அதிகரிக்க உதவும் அகத்தியர் பெயர் கொண்ட அகத்தி கீரை!

முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை நம் உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது மூட்டுவலி, சரும நோய்கள், மூலநோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. இவை உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சளி, இருமல் போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரை ஒரு சிறந்த தேர்வாகும்.

வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையில் வைட்டமின் ஏ, கால்சியம், பீட்டா கரோட்டின், தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. இது மூளை செயல்பாட்டை மேம்படுத்தி நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரக நோயாளிகளுக்கு வெந்தயக்கீரை மிகவும் நன்மை பயக்கும்.

கீழாநெல்லி கீரை

இது மருத்துவகுணங்கள் நிறைந்த சிறந்த மூலிகையாகும். இவை கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, தோல் நோய்கள், மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், கீழாநெல்லி உட்கொள்ளல் உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இது போன்று இன்னும் ஏராளமான கீரை வகைகள் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. எனினும், சில உடல்நலப் பிரச்சனைகள், கீரை ஒவ்வாமை கொண்டவர்கள் சில வகை கீரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Mookirattai keerai Benefits: வாரி வழங்கும் வள்ளல்! மூக்கிரட்டை கீரை தரும் அற்புத நன்மைகள் இங்கே..

Image Source: Freepik

Read Next

எப்பேற்பட்ட கொழுப்பையும் கரைச்சி எடுக்க நைட் தூங்கும் முன் இந்த வாட்டர் ஒரு கப் குடிங்க..

Disclaimer