Spinach Benefits For Women's Health: பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனென்றால், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் உடல் அமைப்பு வேறுபட்டது என்பதே இதற்குக் காரணம். அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. குறிப்பாக உடல் பலவீனம், எலும்புகள் பலவீனம், PCOS, தைராய்டு மற்றும் மெனோபாஸ் போன்ற பிரச்சனைகள் பெண்களிடம் அடிக்கடி காணப்படுகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, உணவை முறையை மாற்றுவது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். பெண்கள் குளிர்காலத்தில் தினமும் கீரையை சாப்பிட்டு வந்தால், உடல் வலுப்பெறுவதற்கு பெரிதும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : நடு ராத்திரியில் காஃபி குடிப்பவரா நீங்க? அப்போ கண்டிப்பா இதை படியுங்க!
கீரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி. இதில், இரும்பு, கால்சியம், ஃபோலேட் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பெண்கள் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெண்கள் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இரத்த சோகை நீங்கும்
இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்த கீரையைச் சாப்பிடுவதால், உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்த சோகை பிரச்சினை நீங்கும். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உடலில் ரத்தம் குறைவாக இருப்பது சகஜமாகிவிட்டது. ஆனால், இது அலட்சியமான விஷயம் அல்ல.
இந்த பதிவும் உதவலாம் : தப்பித்தவறி கூட இந்த எண்ணெயில் சமையல் செய்யாதீங்க… உயிருக்கே ஆபத்தாகலாம்!
எலும்புகள் வலுவடையும்
வயது ஏற ஏற பெண்களின் எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, அவர்கள் தங்கள் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், கீரை அவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதை சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும்.
ஹார்மோன்களை சமநிலையில் வைக்கும்

பசலைக்கீரை சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும். இது ஒழுங்கற்ற மாதவிடாய், கடுமையான பிடிப்புகள் மற்றும் வலியின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் PCOS போன்றவற்றையும் ஒழுங்குபடுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Rainy Season: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப் குடியுங்க!
நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்
அடிக்கடி நோய்வாய்ப்படும் பெண்களுக்கு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் நோய்களை எதிர்க்கும் உடலின் ஆற்றல் மேம்படும்.
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்

பசலைக்கீரை சாப்பிடுவதால் முடி வலுவடையும். இது சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை தடுக்கிறது. இது முதுமையின் அறிகுறிகளைக் குறைக்கவும், நீண்ட காலம் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
Pic Courtesy: Freepik