Which oils are bad for cooking: பல நூற்றாண்டுகளாக நாம் கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பசு நெய் போன்றவற்றை சமையலுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மற்றும் நமது உணவை ஆரோக்கியமாக மாற்றவும் உதவுகிறது. இப்போதெல்லாம் பல்வேறு வகையான சமையல் எண்ணெய்கள் சந்தையில் கிடைக்கின்றன.
ஆனால், அவை அனைத்தும் சமையல் செய்வதற்கு நல்லதா? நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல சமையல் எண்ணெய்கள் சந்தையில் கிடைக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? அன்றாட வாழ்க்கையில், நம்மில் பெரும்பாலானோர் சில சமையல் எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவோம். சில குறிப்பிட்ட எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், இன்றே அதை உபயோகிப்பதை நிறுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம் : Rainy Season: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப் குடியுங்க!
ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் வரலக்ஷ்மி யனமந்த்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொதுவாக ஆரோக்கியமாக கருதப்படும் 3 சமையல் எண்ணெய்களை பற்றி விளக்கியுள்ளார். ஆனால் உண்மையில் அவை நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சமையலுக்கு பயன்படுத்தக்கூடா எண்ணெய்கள்

கடுகு எண்ணெய் - Canola Oil
இந்த எண்ணெய் ராப்சீட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்படுகிறது மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களில் அதிகமாக உள்ளது. ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உடலில் வீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றனர். அதற்குக் காரணம், துரித உணவில் நாம் ஏற்கனவே அவற்றை அதிகமாக உட்கொள்வது தான்.
இந்த பதிவும் உதவலாம் : Gut Health: நெஞ்செரிச்சலை குறைக்க சமையலறையில் உள்ள இந்த மசாலா பொருட்களை சாப்பிடுங்கள்!
சோயாபீன் எண்ணெய் - Soybean Oil

இதில் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் இருந்தாலும், சமைக்கும் போது இது வேகமாக ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் சமைத்தால், அதன் ஊட்டச்சத்து குறைந்து, தீங்கு விளைவிக்கும் நச்சுகள் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இதில், அல்ஃபாடாக்சின்கள் உள்ளன, அவை பூஞ்சைகளால் வெளியிடப்படும் நச்சுகள், அவை நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சோள எண்ணெய் - Corn Oil
சோளத்தின் மிகப்பெரிய பிரச்சனை GMO ஆகும். அமெரிக்காவில் கிடைக்கும் சோளத்தில் 90% GMO உள்ளது. இத்தகைய GMOS ஆனது கிளைபோசேட் போன்ற பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, மனிதர்களுக்கு ஒவ்வாமையை விரைவாகத் தூண்டும் என கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : இந்த காய்கறிகளில் மறந்தும் தோலை நீக்காதீங்க; அதன் முழு சத்தும் தோலில் தான் இருக்காம்!
கனோலாவைப் போலவே, சோயாபீன் மற்றும் சோளம் இரண்டிலும் அதிக அளவு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. நீங்கள் இந்த சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இன்றிலிருந்து அவற்றிலிருந்து விலகி இருங்கள்.
Pic Courtesy: Freepik