நல்ல ஆரோக்கியத்திற்கு நிபுணர் சொன்ன இந்த 4 இயற்கை எண்ணெய்களை சமையலுக்கு யூஸ் பண்ணுங்க

Natural oils for health and wellness: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான எண்ணெய்களைப் பயன்படுத்துவது அவசியமாகும். ஆனால், இன்று பலருக்கும் எந்த எண்ணெயை உபயோகப்படுத்துவது நல்லது என்று தெரிவதில்லை. அவர்களுக்கு பயன்தரும் விதமாக நிபுணர் ஒருவர் சமையலுக்கு பயன்படுத்த இயற்கை எண்ணெய்களை பரிந்துரைத்துள்ளார்.
  • SHARE
  • FOLLOW
நல்ல ஆரோக்கியத்திற்கு நிபுணர் சொன்ன இந்த 4 இயற்கை எண்ணெய்களை சமையலுக்கு யூஸ் பண்ணுங்க

Which cooking oil is good for health: உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, புதிய மற்றும் சுத்தமான உணவுப்பொருள்களைப் பயன்படுத்துவது அவசியமாகும். அவ்வாறு, சமையலில் ஒவ்வொரு உணவிலும் சேர்க்கும் முக்கிய பொருள்களில் ஒன்றாக எண்ணெய் அமைகிறது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பல்வேறு எண்ணெய்கள் பெரும்பாலும் கலப்பட எண்ணெய்களாக இருக்கலாம். இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவது நாளடைவில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகலாம்.

இதன் காரணமாகவே பலரும் எந்த இயற்கை எண்ணெயைப் பயன்படுத்துவது, எந்த பிராண்டை நம்புவது என்பது குறித்து குழப்பத்திலேயே இருப்பர். சந்தையில் பல மாற்று வழிகள் இருப்பதால், நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கலாம். இதை எளிதாக்கும் வகையில் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய நான்கு இயற்கை எண்ணெய்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இயற்கை எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தரும் வகையில் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cooking Oil: எடை குறைக்க வீட்டில் தினசரி இந்த சமையல் எண்ணெயை மட்டும் பயன்படுத்தி பாருங்க!

உடல் ஆரோக்கியத்திற்கு எந்த சமையல் எண்ணெய் நல்லது?

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு முக்கிய காரணம், தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCTs) நிறைந்திருப்பதால், இது ஒரு சக்தி மையமாக செயல்படுகிறது என நிபுணர் கூறியுள்ளார். மேலும் இது ஒரு இயற்கையான ஆற்றல் மூலமாகவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவக்கூடிய எண்ணெய் ஆகும். கூடுதலாக, தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலமும் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது என நிபுணர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தேங்காய் எண்ணெயை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதால், இதை நம் அன்றாட உணவில் சேர்க்கலாம். மேலும் இதை தலைமுடி, சருமம் என அனைத்திற்கும் உதவும் எனக் கூறியுள்ளார்.

கடுகு எண்ணெய்

நம் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் அவசியமாக இருக்க வேண்டியவற்றில் கடுகு எண்ணெயும் ஒன்று என ஊட்டச்சத்து நிபுண கூறியுள்ளார். இந்த கடுகு எண்ணெயில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, கடுகு எண்ணெய் ஆனது சிறந்த செரிமானத்தை ஆதரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

மேலும் கடுகு எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே இது சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக அமைகிறது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இதை உணவில் பயன்படுத்தலாம். சருமம் மற்றும் கூந்தலிலும் தடவலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உங்க சமையலில் இந்த எண்ணெய்களைச் சேர்க்கலாம்

அவகேடோ எண்ணெய்

வெண்ணெய்ப்பழம் என்றழைக்கப்படும் அவகேடோவிலிருந்து அவகேடோ எண்ணெய் தயார் செய்யப்படுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதால், அற்புதங்களைச் செய்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார். இது தவிர, இந்த அவகேடோ எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை சருமம் மற்றும் கண்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

இந்த அவகேடோ எண்ணெய் ஆனது அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடியதாகும். மேலும் இது சருமத்திற்கு சேதம் விளைவிக்காமல், ஈரப்பதமூட்டியாகவும் செயல்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார்.

A2 பசும்பால் நெய்

முதலில் A2 பசும்பாலில் நெய்யின் நன்மைகள் பற்றி கூறினார். இந்த நெய்யானது A2 பீட்டா-கேசினைக் கொண்டுள்ளது. வழக்கமான பசு நெய்யுடன் இந்த நெய்யை ஒப்பிடுகையில், இது செரிமானம் செய்ய எளிதானதாகவும், A1 பீட்டா-கேசினையும் கொண்டுள்ளது.

மேலும் A2 நெய்யில் கூடுதல் அழற்சி பண்புகள் நிறைந்துள்ளது. இவை குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுவதாக நிபுணர் கூறினார். இந்த A2 நெய் ஹார்மோன் சமநிலையை ஆதரிப்பதாகவும், சரும ஆரோக்கியத்திற்கு உதவும் நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நிபுணர் பரிந்துரைத்த இந்த இயற்கை எண்ணெய்களை சமையலுக்குப் பயன்படுத்தலாம். எனினும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Best Cooking Oil: இந்த 5 எண்ணெய்களை சமையலுக்குப் பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் & இதயப் பிரச்சனை வராது!

Image Source: Freepik

Read Next

வெறும் வயிற்றில் ஆம்லா மொரிங்கா ஷாட்ஸ் குடிச்சி பாருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

Disclaimer