இந்திய சமையலில் எண்ணெயின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் எந்த எண்ணெய் உடலுக்கு நல்லது? எந்த எண்ணெய் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்? என்ற பல கேள்விகள் மக்களின் மனதில் எழுகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக இதயநோய் நிபுணர், டாக்டர் அலோக் சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இந்திய சமலுக்கு ஏற்ற 5 எண்ணெய்களை பட்டியலிட்டுள்ளார். மேலும் அதன் நன்மைகளை விளக்கியுள்ளார்.
இந்திய சமையலுக்கு ஏற்ற எண்ணெய்கள்..
1. நெய்
நெய் - வைட்டமின் A, D, E, K நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்திய சமையலில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட நெய், இன்று மீண்டும் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
2. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய், மூளை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் உள்ள MCTs (Medium Chain Triglycerides) உடலால் விரைவில் சிதைக்கப்பட்டு உடனடி ஆற்றல் அளிக்கின்றன. மேலும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை தடுப்பதிலும் உதவுகிறது.
3. கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் வீக்கத்தை குறைக்கும் திறன் கொண்டது. ஒமேகா கொழுப்பு அமிலங்களில் செறிந்த கடுகு எண்ணெய், இதயத்திற்கு சிறந்த நண்பராக கருதப்படுகிறது.
மேலும் படிக்க: இதய நோயைத் தவிர்க்க சமையல் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது? - எந்த எண்ணெய் சிறந்தது?
4. எள் எண்ணெய்
எள் எண்ணெய் மூட்டு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், இந்திய சமையலுக்கு ஏற்ற ஒரு சிறந்த தேர்வாக எள் எண்ணெயை ஆக்குகின்றன.
5. நிலக்கடலை எண்ணெய்
நிலக்கடலை எண்ணெயில் உள்ள தாவர ஸ்டெரோல்கள் (plant sterols) இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. மிதமாக பயன்படுத்தப்படும் போது இது இதயத்திற்கு நல்லது என்று நிபுணர் அறிவுறுத்துகிறார்.
View this post on Instagram
Disclaimer: இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. உங்கள் உடல்நிலை தொடர்பான சந்தேகங்களுக்கு எப்போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.