இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் சந்தித்து வரும் முக்கிய சுகாதார சிக்கல்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம் (BP). வழக்கமாக BP அளவு 120/80 ஆக இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 120–140 வரையிலான அளவு Normal-ஆக கருதப்படுகிறது. ஆனால் இந்த அளவை தாண்டினால், இதய நோய், ஸ்ட்ரோக், சிறுநீரக பிரச்சினை போன்ற தீவிர விளைவுகள் ஏற்படலாம்.
BP-ஐ கட்டுக்குள் வைக்க எல்லோரும் மாத்திரையை நாடுகிறார்கள். மாத்திரையை மட்டும் நம்பினால் போதாது. சரியான உணவு முறை இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, மருத்துவர் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பரிந்துரைத்த 5 உணவுகள் பற்றி அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
BP-ஐ கட்டுப்படுத்து உணவுகள்..
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம், உடலில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை சிறுநீரின் மூலம் வெளியேற்றுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது பிபியை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் உள்ள பாலிஃபினால்கள், மெக்னீசியம், ப்ளாவனாய்ட்கள் - இரத்த நாளங்களை தளர்த்தி, BP-ஐ கட்டுக்குள் இருக்க உதவுகின்றன.
பீட்ரூட்
பீட்ரூட்டில் அதிகமாக உள்ள ஆர்கானிக் நைட்ரேட்கள், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி இரத்த நாளங்களை விரிவாக்குகின்றன. இதனால் இரத்த அழுத்தம் இயற்கையாக குறைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா.? இந்த உணவுகள் போதும்..
மாதுளை பழம்
மாதுளை பழம், நமது உடலின் ரெனின்-ஆஞ்ஜியோடென்சின் சிஸ்டம் செயல்பாட்டை குறைக்கிறது. இதனால் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் மீது அழுத்தம் குறைந்து, BP குறைகிறது.
இஞ்சி
இஞ்சி, கால்சியம் சேனல் ப்ளாக்கரை குறைத்து தசைகளுக்கு ஓய்வு தருகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி, பிபி குறைகிறது. எனவே உணவில் இஞ்சியை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
View this post on Instagram
பொறுப்பு துறப்பு
இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் அல்ல. இயற்கை உணவுகள் பிபியை கட்டுப்படுத்த உதவக்கூடும் என்றாலும், நாள்பட்ட அல்லது தீவிர பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். இந்த குறிப்புகள் முதலுதவியாக மட்டுமே கருதப்பட வேண்டும்.