இன்றைய காலகட்டத்தில், உயர் இரத்த அழுத்தம் (High BP) என்பது பெரும்பாலான மக்களை பாதித்து வரும் ஒரு “Silent Killer” எனப்படும். இதை கட்டுப்படுத்த அதிக செலவு செய்ய வேண்டிய மருந்துகளோ, கடினமான டயட்டோ அவசியமில்லை என்கிறார் அமெரிக்காவில் பணியாற்றும் பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் மணிக்கம்.
அவரின் கூற்றுப்படி, தினசரி வாழ்க்கையில் சில எளிய மாற்றங்கள் செய்தாலே, உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து டாக்டர் பால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றை இங்கே காண்போம்.
உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்கும் வழிகள்
Step 1: இன்சுலினுக்கு 12 மணி நேர ஓய்வு கொடுங்கள்
உடலில் இன்சுலின் ஹார்மோனுக்கு ஓய்வு கொடுப்பது மிக முக்கியம். அதற்காக, இரவு 7 மணிக்குப் பிறகு சாப்பிடாமல், மறுநாள் காலை 7 மணி வரை அதை கடைப்பிடிக்கலாம். இந்த இடைவேளையில், தண்ணீர் தவிர எந்தவித snacks-யும் சாப்பிடக்கூடாது. இதனால், உடலின் இன்சுலின் செயல்பாடு சீராகும் என்கிறார் மருத்துவர்.
Step 2: சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும்
உணவில் அதிக அளவு சாதம், ரொட்டி, இனிப்புகள் அல்லது குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். சர்க்கரையை குறைப்பதன் மூலம், இன்சுலின் வேலைச்சுமையை குறைக்கலாம். இதனால், இரத்த அழுத்தம் இயற்கையாகவே சீராகும்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க BP கண்ட்ரோலே இல்லாமா எகிறுதா? இந்த ஜூஸ் குடிங்க… டக்குன்னு கம்மியாகிடும்!
Step 3: பாக்கெட் உணவுகளை தவிர்க்கவும்
Processed மற்றும் Packaged foods-ல் சர்க்கரை அதிகம் இருக்கும். அவை உடலில் இன்சுலினை அதிகமாக சிரமப்படுத்தும். அதற்குப் பதிலாக - முழுத்தானியங்கள், பச்சை காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள், Fermented foods, புதிய பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். இவற்றை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
14 நாள் சவால் – BP குறையும்!
டாக்டர் பால் மணிக்கம் கூறுவதுபடி, 120/80 க்கு மேல் BP உள்ளவர்கள், இந்த 3 வழிகளை மட்டும் இரண்டு வாரங்கள் பின்பற்றினால், இரத்த அழுத்தத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும்.
இறுதிச் சொல்..
உலகளவில் சுமார் 80% மக்களுக்கு, தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கூட தெரியாது. அவர்கள் திடீரென ஸ்ட்ரோக் அல்லது இதயநோய் தாக்கிய பிறகே அறிகிறார்கள். ஆகையால் இந்த வழிகளை, இன்று முதல் ஆரம்பியுங்கள் என்கிறார் டாக்டர் பால் மணிக்கம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அறிவுரைகள் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனையாக கருதப்பட கூடாது. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது பிற உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளும் முன் தங்களின் மருத்துவரை அணுகுவது அவசியம்.