Why is it harmful to sleep after 11pm: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. மக்கள் நாள்தோறும் அதிகப்படியான மொபைல், லேப்டாப் மற்றும் கணினி போன்ற பயன்பாட்டின் காரணமாக பல்வேறு உடல்நல அபாயங்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, இரவுப் பணிகளில் ஈடுபடுவது, இரவில் தாமதமாக தூங்குவது உள்ளிட்டவை அவர்களின் தூக்க ஆரோக்கியத்தை கணிசமாகப் பாதிக்கக் கூடும்.
இரவு நேர தூக்கப் பழக்கம் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த அபாயங்களைப் புரிந்து கொள்வதும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இரவில் சரியான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதும் முக்கியமாகும். ஊட்டச்சத்து நிபுணர் தர்ஷினி சுரேந்திரன் அவர்கள் PCOS, தைராய்டு, கருவுறாமை, ஹார்மோன் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு குறித்த தகவல்களைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இவர் இரவில் தாமதமாக தூங்குவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளா சில தகவல்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரவில் தாமதமாக சாப்பிடுவது உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
இரவு தாமதமாக தூங்குவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
அதிக வீக்கம்
இரவு சரியான நேரத்தில் தூங்காமல் தாமதமாக தூங்குவது வீக்கத்தை அதிகரிக்கக்கூடும். இதனால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் கருவளையங்கள் தோன்றலாம். ஏனெனில், பகல் நேரத்தை விட கணினி அமைப்பு அல்லது மொபைல் போன் முன் அமர்ந்திருக்கும் போது கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் கண்களுக்குக் கீழ் திரவம் தேங்கி நிற்பதால் தூக்கமின்மை காரணமாக கண்கள் வீங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
தைராய் நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு
ஊட்டச்சத்து நிபுணர் தொடர்ந்து தாமதமாக தூங்குவது தைராய்டு பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவ்வாறு தாமதமாக தூங்குவது இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சியை சீர்குலைப்பதுடன், ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-தைராய்டு (HPT) அச்சின் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் தைராய்டு பிரச்சினைகளை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் காரணமாக ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் போன்ற நிலைமைகளை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் குறைவான உற்பத்தி
தாமதமாகத் தூங்குவது உடலில் சர்க்காடியன் தாளத்தை, அதாவது உள் கடிகாரத்தை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக, பெண்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற இனப்பெருக்க ஹார்மோன்களின் சரியான நேரத்தில் வெளியீடு கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது.
டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பது
தாமதமாகத் தூங்குவது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாக நிபுணர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், உடலின் சர்க்காடியன் தாளத்துடன் இந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி இணைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான உற்பத்தி ஆழ்ந்த தூக்கத்தின் போது நிகழ்கிறது. இந்நிலையில், தாமதமான இரவுகளால் இந்த உற்பத்தி குறைக்கிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியம், மனநிலை மற்றும் ஆற்றலை பாதிக்கக்கூடியதாக அமையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Disease: தினமும் இரவு லேட்டாக தூங்குபவரா நீங்க? கவனம் இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்!
மலச் சுழற்சி மற்றும் பசியின்மையில் மாற்றம்
தாமதமாக தூங்குவது உடலின் உள் கடிகாரதத்தை சீர்குலைப்பதால் மலம் சுழற்சி மற்றும் பசியின்மை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம். இந்த ஒத்திசைவு நீக்கம் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் குடல் நுண்ணுயிரிகளை பாதிக்கிறது. இந்நிலையில் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்பட்டு பசியை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, இரவு தாமதமாக தூங்குவது, குப்பை உணவுகளை அதிகம் உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கக்கூடும்.
View this post on Instagram
அதிக புரோலாக்டின் அளவுகள்
இரவில் தாமதமாகத் தூங்குவது அதிக புரோலாக்டின் அளவை ஏற்படுத்தாது. ஆனால், இது எந்த நேர தூக்கக் காலத்திலும் தொடர்புடையவையாகும். இவை எந்த நேரத்தில் நிகழ்ந்தாலும், உடலின் சர்க்காடியன் தாளத்தை விட தூக்கத்திற்கு உடலியல் ரீதியான எதிர்வினை காரணமாகும். பொதுவாக, தூக்கத்தின் தொடக்கத்தில் புரோலாக்டின் சுரப்பு கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் விழித்தவுடன் கூர்மையாக குறைகிறது. இந்நிலையில், தாமதமான தூங்குவது இரவு நேரங்களில் அதிக புரோலாக்டினை ஏற்படுத்தும்.
மெலடோனின் மற்றும் குறைவான தூக்கத்தின் தரம்
தாமதமாகத் தூங்குவது உடலின் இயற்கையான சர்க்காடியன் தாளத்தை சீர்குலைப்பதன் மூலம் மெலடோனின் உற்பத்தியில் தலையிடுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் நாம் குறைவாக ஓய்வெடுக்கிறோம். மேலும் இது வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.
இவ்வாறு தாமதமாக தூங்குவதால் இது போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே ஒவ்வொரு நாளும் நல்ல, சீரான 7-9 மணி நேர இரவு தூக்கத்தைக் கடைபிடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: நைட்டு லேட்டா தூங்குறீங்களா.? ஹார்மோன் பிரச்சனை விளிம்பில் உள்ளீர்கள்..
Image Source: Freepik