நீங்கள் இரவில் லேட்டாக தூங்குபவரா? - இது உங்களுக்கான எச்சரிக்கை!

  • SHARE
  • FOLLOW
நீங்கள் இரவில் லேட்டாக தூங்குபவரா? - இது உங்களுக்கான எச்சரிக்கை!


Sleeping Late At Night : டிஜிட்டல் யுகத்தில்.. இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் வெகுநேரம் வரை போன், லேப்டாப் போன்றவற்றை பார்ப்பதை வழக்கமாக்கியுள்ளனர். சிலர் இரவு 12 மணிக்கு மேல் கண்விழித்து வேலை செய்கிறார்கள்.

இரவில் தாமதமாக தூங்குவதும், தாமதமாக எழுவதும் நமது உயிரியல் கடிகாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர்.

பிரிட்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு நீரிழிவு, மனநல கோளாறுகள், நரம்பியல் பிரச்சினைகள், வயிறு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

இரவில் நீண்ட நேரம் கழித்து தூங்குபவர்களுக்கு என்ன மாதிரியான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்…

இந்த தவறால் ஆயுசுக்கே ஆபத்து:

இரவில் நீண்ட நேரம் விழிந்திருந்து, தாமதமாக உறங்கும் நபர்களின் ஆயுள் காலம் குறையும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் லான்செட் சுகாதாரக்குழு தென் கொரியாவில் 3,757 நபர்களிடம் நடத்திய ஆய்வில், 40 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் அதிக நேரம் தூங்குபவர்களின் ஆயுட்காலம் குறைவதைக் கண்டறிந்தனர். சுமார் இந்த ஆராய்ச்சியானது 16.7 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூளைக்கு என்ன மாதிரியான பாதிப்பு வரும்?

இரவில் தாமதமாக தூங்குவது நினைவாற்றல், முடிவெடுத்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கிறது.

இது செறிவு மற்றும் உற்பத்தித்திறனையும் மோசமாக பாதிக்கிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம். நாள்பட்ட தூக்கமின்மை அறிவாற்றல் செயல்பாடு, மனநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

இரவில் தாமதமாக தூங்கினால் எடை கூடுமா?

தூங்கும் முறை ஒழுங்கற்றதாக இருந்தால், அது ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. குறிப்பாக பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு, உடல் பருமன் மற்றும் அதிக எடை ஆபத்து அதிகரிக்கிறது.

தூக்கம் சீர்குலைந்தால், லெப்டின் மற்றும் கிரெலின் போன்ற பசி மற்றும் பசி முழுமையடைந்ததைக் குறிக்கும் ஹார்மோன்கள் சமநிலையற்றதாகிவிடுகிறது. இதன் காரணமாக தூக்க நேரத்தை முறையாக கடைபிடிக்காதவர்கள் அதிக உணவை உண்கின்றனர். இது கலோரிகளை திறம்பட எரிக்கும் திறனைக் குறைத்து, உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்:

நாள்பட்ட தூக்கமின்மை நோயெதிர்ப்பு மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும். உடலுக்குத் தொடர்ந்து போதுமான ஓய்வு கிடைக்காதபோது, ​​நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும் அதன் திறன் குறைகிறது. தேவையான நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் ஆன்டிபாடிகளை உருவாக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனும் குறையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்க்கரை அதிகரிக்கும்:

ஒரு இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் உடலின் ரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கிறது. இதனால் இன்சுலின் எதிர்ப்பு அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.

இரவில் தாமதமாக தூங்கினால், அது ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும். இந்த காரணிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதை கடினமாக்குகின்றன.

Image Source: Freepik

Read Next

Urinary Problems: கோடையில் சிறுநீர் பிரச்னை ஏற்படுகிறதா? இதனை தடுக்க சூப்பர் டிப்ஸ் இங்கே…

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்