What is the health benefits of insulin plant: பொதுவாக, காஸ்டஸ் இக்னியஸ் என்றழைக்கப்படும் இன்சுலின் செடியானது நீண்ட காலமாகவே பாரம்பரிய மருத்துவத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் செடியாகும். இந்த Fiery costus இன்சுலின் பிளான்ட் ஆனது உயர் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் திறனுக்காக நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த செடியின் இலைகள் அல்லது சாறுகளை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இது தவிர, உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த செடியானது ஒட்டுமொத்த உயிர்ச்சக்தியை அதிகரிக்க நன்கு பெயர் பெற்றதாகும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா அவர்கள் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இன்சுலின் செடியின் முக்கிய நன்மைகளை எடுத்துரைத்துள்ளார். அதில் அவர் இந்த செடியை "இயற்கையின் இலவச சிகிச்சை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணரின் பூஜா அவர்களின் கூற்றுப்படி,”இதன் பயன்பாடுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், இன்சுலின் எதிர்ப்பு, PCOS அல்லது எடை இழப்பு சவால்கள் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்“ என்று கூறினார்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS, டயாபடிஸ்க்கு ஒரே தீர்வு.. வீட்டிலேயே ஈஸியா தயார் செய்த இந்த ஒரு ட்ரிங்ஸ் குடிங்க. நிபுணர் சொன்ன டிப்ஸ் இதோ
இந்த செடியின் முக்கிய செயலில் உள்ள கூறு, போரோசெலிக் அமிலம் ஆகும். இது குளுக்கோஸை உறிஞ்சக்கூடிய உடலின் திறனை அதிகரிப்பதன் மூலமும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் செயல்படுகிறது. மேலும் இது கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களின் ஆரோக்கியத்தையும் ஆதரிக்க உதவுகிறது. சிறந்த முடிவுகளைப் பெற இதன் ஒன்று அல்லது இரண்டு பச்சை இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட நிபுணர் பரிந்துரைக்கிறார்.
வீடியோவில் மேலும் அவர் கூறியதாவது,”சில ஆராய்ச்சிகள் இந்த செடியின் செயல்திறனை சுட்டிக்காட்டினாலும், பெரிய அளவிலான அறிவியல் ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகிறது. எந்தவொரு இயற்கை தீர்வையும் போலவே, இந்த இன்சுலின் பிளான்ட் செடியை அன்றாட வழக்கத்தில் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன்பு சுகாதார வழங்குநரை அணுகுவது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்சுலின் செடியைப் பயன்படுத்துவதற்கான எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்
ஊட்டச்சத்து நிபுணர் பூஜா அவர்கள், இன்சுலின் செடியை உட்கொள்வதற்கான எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை விவரித்துள்ளார். மேலும் இதை முதன்மை நீரிழிவு சிகிச்சைக்கு மாற்றாக இல்லாமல், அதை ஒரு துணை மாற்றாகக் கருத வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளுடன் இந்த இலைகளைப் பயன்படுத்தினால் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும். இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் துளசி மற்றும் வேம்பு போன்ற பிற மூலிகைகளும் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுவதாக பூஜா மகிஜா விவரித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: டயாபடீஸை ரிவர்ஸ் செய்யும் சூப்பர் டீ ரெசிபி இதோ! நிபுணர் சொன்னர் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
இந்த இன்சுலின் செடியானது செடி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கான இயற்கையான விருப்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். அதே சமயம், இந்த கோஸ்டஸ் இக்னிஸின் சாத்தியமான நன்மைகள் குறித்து சிறிய அளவிலான ஆராய்ச்சிகள் மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் இன்சுலின் செடியின் நிலையான விளைவுகளையும் ஆரோக்கிய ஆதாயங்களையும் உருவாக்க, வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம், நீரேற்றம் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற வெற்றிகரமான வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவை என்று நிபுணர் கூறியுள்ளார்.
முன்பாக, ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா இரத்த சர்க்கரையை எவ்வாறு திறம்படக் குறைப்பது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது என்பது குறித்து அறிவுறுத்தியுள்ளார். அதில் அவர்,”உணவில் இருந்து அனைத்து சர்க்கரையையும் நீக்கிவிட்டீர்கள். ஆனால், இரத்த குளுக்கோஸ் அளவுகள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதைக் குறிக்கின்றன” என்று இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Costus Igneus: இன்சுலின் செடி உண்மையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!
Image Source: Freepik