Is it good to drink cinnamon water before bed: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். துரித உணவு, மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கம் போன்றவை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அன்றாட உணவில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம், பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க முடியும்.
அவ்வாறு நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள், குடிக்க வேண்டிய பானங்களை ஆரோக்கியமானதாக மாற்றலாம். அந்த வகையில் தினந்தோறும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்துவது நம் உடலில் பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இதற்கு இலவங்கப்பட்டையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களே காரணமாகும். இதில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக இலவங்கப்பட்டை நீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்.
இரவு தூங்குவதற்கு முன்பாக இலவங்கப்பட்டை நீர் குடிப்பதன் நன்மைகள்
எடை இழப்புக்கு
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இலவங்கப்பட்ட தண்ணீர் சிறந்த தேர்வாக அமைகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இந்நிலையில், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இரவு தூங்கும் முன் இந்த பானத்தைக் குடிப்பது மறுநாள் வரை உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்புக்கு தேன் மற்றும் இலவங்கப்பட்டை நீரின் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இலவங்கப்பட்டை நீர் உட்கொள்ளலின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதற்கு இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்களே காரணமாகும். இவை உடலின் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறனை மேம்படுத்துகிறது. மேலும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கிறது.
செரிமான அமைப்பை மேம்படுத்த
இலவங்கப்பட்டை நீர் உட்கொள்ளலின் மூலம் செரிமான சக்தியை மேம்படுத்தலாம். இதன் மூலம் வாயு, அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக இலவங்கப்பட்டை நீரைக் குடிப்பது உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. மேலும் இது மறுநாள் காலையில் வயிறு லேசாகவும் வசதியாகவும் இருக்க வழிவகுக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கிறது.
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த
இலவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை பண்புகள் நிறைந்துள்ளன. இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, இலவங்கப்பட்டை நீரைக் குடிப்பதன் மூலம் காலை வரை உங்கள் இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்கலாம். இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அல்லது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைய மட்டுமல்ல.. பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் தேன் மற்றும் இலவங்கப்பட்டை நீர்..
மூளை ஆரோக்கியத்திற்கு
இலவங்கப்பட்டையில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் கவனத்தை அதிகரிப்பதன் மூலம் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற வயது தொடர்பான நரம்புச் சிதைவு நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
இலவங்கப்பட்டை தண்ணீரை தயாரிப்பது எப்படி?
- முதலில் ஒரு கிளாஸ் அளவிலான தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு அதில் 1 அங்குல இலவங்கப்பட்டையைச் சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க வைக்கலாம்.
- பின்னர் அதை வடிகட்டி, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சூடாகவோ அல்லது சிறிது குளிரவைத்தோ குடிக்கலாம்.
இவ்வாறு ஆரோக்கியமான முறையில் தயார் செய்து இலவங்கப்பட்டையை தண்ணீரைக் குடிப்பதன் மூலம் ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சர்ரென உயரும் சுகர் லெவலை மடமடனு குறைக்க உங்க சமையலில் சேர்க்கும் இந்த ஒரு மசாலா போதும்
Image Source: Freepik