Agathi Keerai Benefits: எந்த காலக்கட்டத்திலும் சூப்பர் ஃபுட்டாக இருப்பது கீரை வகைகள் ஆகும். இந்த பச்சை இலை காய்கறி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும், அதே போல் இது ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இந்த காய்கறி ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். இது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்கவும் பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. இது வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
மேலும் நார்ச்சத்து, இரும்பு, ஃபோலேட் புரதம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சிறந்த மூலமாகும். எனவே, இதை எப்போதும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உடலில் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த உணவு ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். கீரை சாப்பிடுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இது தோல் மற்றும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும். இதை உங்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக மாற்றுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தருக்கும் கீரை சாப்பிடுவது நன்மை பயக்கும். கீரைகளில் பல வகை இருந்தாலும் இதில் அரசனாக இருக்கும் கீரைகளில் ஒன்று அகத்தி கீரையாகும். அகத்தி கீரையின் நன்மைகளை விரிவாக தெரிந்துக் கொண்டு கண்டிப்பாக இதை சாப்பிட்டு நீங்களும் பலன் பெறுங்கள்.
அகத்தி கீரை நன்மைகள் என்ன?
உடலுக்கு அதீத குளிர்ச்சியை அளிப்பதில் அகத்தி கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. உணவை ஜீரணிக்க வைத்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது, அதோடு மட்டுமல்ல அகத்தி கீரையை அரசன் என குறிப்பிட மற்றொரு காரணம், இது விஷமருந்தின் வீரியத்தையே குறைக்கும் தன்மை கொண்டது. இன்னும் குறிப்பிட வேண்டும் என்றால் அகத்தியர் என்ற முனிவர் பெயரால் இந்த கீரை குறிப்பிடவும் காரணம் உண்டு.
முக்கிய கட்டுரைகள்
- அகத்தி கீரை சாப்பிடுவது கண்பார்வையை தெளிவடையச் செய்யும்
- இரத்த அணுக்களை வலிமையாக்க அகத்தி கீரை உதவுகிறது
- அகத்திக்கீரை இரும்புச் சத்து அதீதமாக உள்ள ஒரு உணவாகும்
- அகத்திக் கீரை சூப் சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
- மூளை ஆற்றல் மேம்பட அகத்திக் கீரை பலனுள்ளதாக இருக்கும்.
- கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்றவும் அகத்திக்கீரை உதவும் என கூறப்படுகிறது.
- அல்சர் எனப்படும் குடல் புண்கள் பிரச்சனையால் பலர் அவதிப்படுகிறார்கள், இதை சரிசெய்ய அகத்தி கீரை பெருமளவு பயனுள்ளதாக இருக்கும்.