$
Fennel Seeds Benefits For Weight Loss: பெரும்பாலானோர் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப்பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் உடல் எடையைக் குறைக்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது தவறன உணவுமுறையே ஆகும். எனவே உடல் எடையை அதிகரிக்கும் சில உணவுகளிலிருந்து நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
அந்த வகையில் பெருஞ்சீரக விதைகள் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. இவை உடல் எடை இழப்பு மட்டுமல்லாமல், பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. இதில் உடல் எடையைக் குறைக்க பெருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொள்ளும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Gain Tips: எவ்ளோ ஒல்லியாக இருந்தாலும் உடனே எடை அதிகரிக்க அரிசியை இப்படி சாப்பிடுங்க
ஊட்டச்சத்துகள்
பெருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்துகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். தினமும் பெருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொள்வது உடல் எடை இழப்பை விரைவாக்குவதுடன், வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

உடல் எடை குறைய பெருஞ்சீரகம் எடுத்துக் கொள்ளும் முறை
பெருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொள்வதில் சில வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி, தினமும் பெருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
ஊறவைத்த பெருஞ்சீரக விதை நீர்
இது பெருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்வதற்கான எளிய முறைகளில் ஒன்றாகும். இதில் முந்தைய நாள் இரவே அரை டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் காலையில், இந்த ஊறவைத்த தண்ணீரை உட்கொள்ளலாம்.
இதில், விதைகளை ஊறவைக்கும் போது சுமார் ஐந்து மற்றும் ஆறு மணி நேரத்திற்குள் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் தண்ணீரில் இணைக்கப்படுகின்றன. இந்நீரை உட்கொள்வது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Intermittent Fasting Benefits: இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்ப இத தெரிஞ்சிக்கோங்க.
வறுத்த பெருஞ்சீரக விதைகள்
உடல் எடையிழப்பைக் கட்டுப்படுத்துவதில் இனிப்புகளும் அடங்கும். இந்த இனிப்பு பசியைக் கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாகும். எனவே, இதற்குப் பதிலாக வறுத்த பெருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஆரோக்கியமானதாகவும், இனிப்பாகவும் இருக்க பழுப்பு சர்க்கரை அல்லது வெல்லம் பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் பெருஞ்சீரக விதைகள்
பொதுவாக, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை சேர்த்து உட்கொள்ளலாம். மேலும், வெந்தயத்தை தண்ணீருடன் காலையில் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இந்த வரிசையில் பெருஞ்சீரக விதைகளை உடல் எடையைக் குறைக்க எடுத்துக் கொள்ளலாம். மேலும் இவை அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Night Drinks: வேகமா எடை குறைய நைட் தூங்கும் முன் இந்த பானங்களை எல்லாம் குடிங்க.
பெருஞ்சீரக விதை தூள்
பெருஞ்சீரகத்தைப் பொடியாக செய்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதில், ஒரு கிளாஸ் தண்ணீரில் பெருஞ்சீரகப் பொடி சேர்த்து அந்த நீரை அருந்தலாம். முழு பெருஞ்சீரக விதைகளை அப்படியே உட்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே, இதற்கு மாற்றாக பெருஞ்சீரகத்தைத் தூள் வடிவில் சேர்த்துக் கொள்ளலாம். இது வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

பெருஞ்சீரகத் தேநீர்
பெருஞ்சீரக விதைகளை உட்கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக, பெருஞ்சீரக டீ தயாரிப்பதாகும். உடல் எடையைக் குறைக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் பெருஞ்சீரக தேநீரை அருந்தலாம். உணவுக்கு இடையில் பசி ஏற்படும் சமயத்தில், ஒரு கப் பெருஞ்சீரக டீ குடிக்கலாம்.
இந்த பெருஞ்சீரக டீயை சுவையாக மாற்ற இயற்கையான இனிப்பு பொருள்களைச் சேர்க்கலாம். இவை பசியைக் குறைப்பதுடன், செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, சுவைக்காக வெல்லம் சேர்த்து உட்கொள்ளலாம்.
பெருஞ்சீரக விதைகள் உடல் எடை இழப்புக்கு மிகச் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. இவ்வாறு விரைவாக உடல் எடையைக் குறைக்க மேலே கூறப்பட்ட வழிகளில் பெருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Powder For Weight Loss: தொப்பை சீக்கிரம் குறைய ஆம்லா பொடியை இப்படி பயன்படுத்துங்க.
Image Source: Freepik