Intermittent Fasting Health Benefits: இன்று பலரும் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அதில் இடைப்பட்ட விரதம் இருக்கும் முறையும் ஒன்றாகும். இது சமீப காலங்களில் பிரபலமாக இருக்கும் ஒரு வகையான டயட் முறையாகும். இந்த முறையைப் பின்பற்றி ஏராளமானோர் உடல் எடையைக் குறைத்து வருகின்றனர்.
இடைப்பட்ட உண்ணாவிரதம்
இந்த இன்டர்மிட்டன்ட் டயட் திட்டத்தில் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகலைத் தருகிறது. மேலும் இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!
இன்டர்மிட்டன்ட் டயட் உணவுமுறை
இந்த டயட்டில் விரதம் இருப்பவர்கள், குறைவாகவும், வயிறு நிரம்பிய அளவு வரையும் சாப்பிடலாம். அதே போல, இந்த டயட்டை பின்பற்றும் முறைகளில் விரத நேரங்களில் வேறுபாடுகள் உண்டு. இந்த இன்டர்மிட்டன்ட் டயட் மூன்று முறைகளில் பின்பற்றப்படுகிறது.
16/8 மணி நேர இடைவெளி முறை
ஒரு நாளில் 24 மணி நேரத்தில், டயட் இருப்பவர்கள் அவர்களுக்கு வசதியான ஏதேனும் ஒரு எட்டு மணி நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த எட்டு மணி நேரத்தில், உடலுக்குத் தேவையான கலோரிகளுக்குள் உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த எட்டு மணி நேரம் ஆனது காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை என எடுத்துக் கொள்ளலாம்.
மற்ற முறைகள்
5:2 முறையானது, வாரத்தில் ஐந்து நாள்கள் வழக்கமான விரத முறையைக் கையாளலாம். ஆனால், இரண்டு நாள்கள் மட்டும் வெறும் 500 முதல் 600 கலோரிகள் வரை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Stages: உடல் எடை இழப்பை விரும்புகிறவர்களா நீங்கள்? இதைக் கவனிங்க
Eat-Stop-Eat என்ற முறையில் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் எதையும் சாப்பிடக்கூடாது. இந்த நாள்களில் 24 மணி நேரமும் விரதம் இருக்க வேண்டும்.
இன்டர்மிட்டன்ட் டயட் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
இடைப்பட்ட விரதத்தை மேற்கொள்பவர்கள் சரியான முறையில் பின்பற்றினால் உடல் எடையைக் குறைப்பதுடன் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
புதிய செல்களை உருவாக்க
இந்த விரதம் இருக்கும் போது உடலில் செல்கள் புத்துயிர் பெற உதவுகிறது. விரதத்தைக் கடைபிடிக்கும் போது, உடலில் பழைய மற்றும் சேதமடைந்த செல்கள் அகற்றப்பட்டு, புதிய செல்கள் உருவாகிறது. இது செல்களின் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar Weight Loss: உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க
மூளை ஆரோக்கியத்திற்கு
இந்த விரத முறை மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருகிறது. மேலும், இது நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
அழற்சியைக் குறைக்க
நாள்பட்ட அழற்சி அல்லது வீக்கம் போன்றவை இதயநோய், சர்க்கரை நோய் அல்லது புற்றுநோய் போன்ற உடல் நலப் பிரச்ச்சனைகளை ஏற்படுத்தலாம். இவற்றைத் தடுக்க இன்டர்மிட்டன்ட் விரதத்தை மேற்கொள்ளலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு
இன்டர்மிட்டன்ட் விரதம் இதயத்திற்கு நன்மை தரக்கூடியதாக அமைகிறது. இது இதய பிரச்சனைகளை உண்டாக்கும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறையணுமா? இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்க
நீரிழிவு நோயைக் குறைக்க
இடைப்பட்ட விரதத்தை மேற்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலின் பிற பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. இந்த விரதத்தின் போது இன்சுலின் உணர்திறன் மேம்பாடு அடைவதுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இது உடலில் சேமிக்கப்பட்டுள்ள குளுக்கோஸை பயன்படுத்துகிறது. இதன் மூலம் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைகிறது.
இந்த விரதம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளைத் தருகிறது. எனினும் இந்த உணவுமுறையை பின்பற்றுவதற்கு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை கலந்தாலோசித்து பிறகு விரதத்தை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Black Cumin Tea Benefits: வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் கருஞ்சீரக டீ தயாரிக்கும் முறை மற்றும் குடிக்கும் முறை
Image Source: Freepik