sashti viratham: சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கும் போது இதை மறக்கக் கூடாது!

  • SHARE
  • FOLLOW
sashti viratham: சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கும் போது இதை மறக்கக் கூடாது!


Sashti Viratham: முருகனுக்காக மனமுருகி அவர் அருள் வேண்டி இருக்கும் விரதங்களில் பிரதான ஒன்று சஷ்டி விரதம். திருமண தடைகள், குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை நீங்க, நோய்கள் தீர, கடன் பிரச்சனை குறைய சஷ்டி விரதம் மிகவும் பலனுள்ளதாக இருக்கும். சஷ்டி விரதம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சூரசம்ஹாரத்திற்கு முன் வரும் விரதம்தான். ஆனால் மாதந்தோறும் சஷ்டி வரும் இந்த தினங்களில் பலர் விரதம் இருப்பார்கள் என்பதை ஏணையோர் அறிந்திருப்பதில்லை.

சஷ்டி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

"சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்" என கூறுவார்கள். மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று விரதம் இருப்பதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கை உண்டு.

இதெல்லாம் ஒருபுறம் என்றாலும் அறிவியல் ரீதியாக கிடைக்கும் நன்மைகளையும், அதேபோல் இந்த காலக்கட்டத்தில் சர்க்கரை வியாதி என்பதும் பெருமளவு அதிகரித்துள்ளது. அவர்கள் தங்கள் உடல்நலனில் பெருமளவு தாக்கத்தை ஏற்படாமல் எப்படி விரதம் இருப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம்

ஒரு நீரிழிவு நோயாளி சாப்பிடாமல் விரதம் இருக்கும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பல பிரச்சனைகள் ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கும் போது ஏதேனும் அசௌகரிய உணர்வை உடலில் சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

அதேபோல் சர்க்கரை நோயாளிகள் விரதம் இருப்பதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதும் அவசியம். அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நீரேற்றமாக இருப்பது அவசியம்

நீரிழிவு நோயாளிகள் உண்ணாவிரதம் இருந்தால், அவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். நீரிழிவு நோயாளிகள் குடிநீருடன் மோர் மற்றும் எலுமிச்சை தண்ணீர் கலந்து உட்கொள்ளலாம்.

குறிப்பிட்ட பழங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்

நீரிழிவு நோயாளிகள் விரதம் இருக்கும் போது அதிக அளவில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழங்களில் சர்க்கரை அளவு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அதிகமாக சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். பல பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. உதாரணமாக, விரதத்தின் போது திராட்சை, ஆரஞ்சு மற்றும் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டாம்.

சரியான நேரத்தில் மருந்துகள் எடுத்துக் கொள்வது முக்கியம்

நீரிழிவு நோயாளிகள் விரதம் இருந்தாலும் சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்வது அவசியம். மருந்துகளை எடுத்துக் கொள்ளாதது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். அதேபோல் வெறும் வயிற்றில் மருந்து சாப்பிடக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் பசியுடன் இருக்க கூடாது

நீரிழிவு நோயாளிகள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். பசியுடன் இருப்பது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். அதேபோல் அடிக்கடி தேநீர் அருந்தக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சஷ்டி விரதம் இருப்பது பல நன்மைகள் கிடைக்கும் என்றாலும் தங்கள் உடலுக்கு ஏற்ப விரத முறைகளை கடைபிடிப்பது மிக நல்லது.

Image Source: FreePik

Read Next

World Kidney Day: நீரிழிவால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், தடுக்கும் முறைகளும் இதோ

Disclaimer

குறிச்சொற்கள்