Karthigai Viratham: கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், சபரிமலை ஐயப்பனுக்கு விரதம், பழனி முருகனுக்கு விரதம், கார்த்திகை விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம் உட்பட பல விரதங்கள் இந்த மாதத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கோ, முருகனுக்கு விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் தொடங்கும் விரதத்தை பலர் மாதம் முழுவதும், 18 நாட்கள், 48 நாட்கள் என தொடர்ந்து விரதம் இருப்பார்கள். இந்த மாதத்திற்கு என ஏணைய தனிச்சிறப்பு உண்டு. கார்த்திகை மாதத்தில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
அதிகம் படித்தவை: Drinking Hot Water: நீங்க எப்பவுமே சுடுதண்ணீர் குடிப்பவரா? அதன் நன்மை தீமைகள் இங்கே!
ஒரு மண்டல விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக ஒருவருக்கு தொற்றி இருக்கும் கெட்டப் பழக்கத்தை அவர் அது கெட்டப் பழக்கம் என்று அறிந்திருந்தும் அதைவிட முடியாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் விரதம் இருந்து அந்தக் கெட்டப் பழக்கத்தில் இருந்து விலகி இருக்கும்போது அதுவே பழகிவிடும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பல தீய பழக்கங்களும் இதில் அடங்கும்.
தினசரி 2 முறை குளிப்பது
அதேபோல் காலை 6 மணிக்கு எழுந்திருப்பது, மாலை குளிப்பது என அனைத்து பழக்கமும் மாலை அணிந்திருக்கும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டும். இப்படி செய்வது உடலின் சூடு தணிந்து உடலுக்கு பெரும் நன்மைகள் ஏற்படும். அதேபோல் இப்படி காலை வேகமாக எழுந்திருப்பது தொடர்ச்சியான பழக்கமாக மாறும். மேலும் காலை வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு பெரும் நன்மைகள் கிடைப்பதோடு அன்றைய நாளையும் சிறப்பாக மாற்றும்.
தரையில் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
விரதம் இருக்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது வழக்கம். இப்படி தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது, முதலில் கழுத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சீராக ஒரே மாதிரியாக தலை முதல் பாதம் வரை சமநிலையில் சாந்தியானம் போல் தூங்குவது உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.
செருப்பு இல்லாமல் நடப்பது நல்லதா?
செருப்பு இல்லாமல் நடந்து செல்வது மிகுந்த நன்மை பயக்கும். பொதுவாக அக்குபஞ்சர் முறையில் செருப்பு இல்லாமல் கூழாங்கல் உள்ளிட்டவற்றில் பாதத்தை வைக்கச் சொல்வார்கள் அல்லது நடக்கச் சொல்வார்கள் அப்படி நடப்பது உள்ளங்கால் செயல்பாட்டை உச்சந்தலையில் உணர வைக்கும். இது கால் உபாதைகள் சரிசெய்வதோடு உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.
பஜனையில் பங்கேற்பதால் கிடைக்கும் நன்மைகள்
பஜனையில் அமருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிமிர்ந்த நிலையில் கடவுளை நினைத்து மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலம், மனம் அமைதி அடையும். நிமிர்ந்து உட்காருவதால் முதுகு எலும்பு சீராகும், மேலும் இரண்டு கைகளையும் ஒன்றாக தட்டிப் பாட்டு பாடுவார்கள். இப்படி கைகள் தட்டிக் கொண்டே இருக்கும் போது இருதய நோய் வராது என ஜெர்மனியில் நடைபெற்ற அக்குபஞ்சர் மருத்துவர்கள் மாநாடு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சக மனிதருக்கு கிடைக்கும் மரியாதை
மாலை அணிந்து இருக்கும் போது மனைவி, தங்கள் குழந்தைகள் உட்பட அனைவரையும் சாமி என்றே குறிப்பிடுவார்கள். இது அனைவரையும் சமமாக மதிக்க கற்றுக் கொள்ளும் விஷயமாகும். குறிப்பாக கடவுளுக்கு இணையாக சக மனிதருக்கு மரியாதை தரும் உணர்வை இந்த பழக்கம் தொடர்ந்து கற்றுக் கொடுக்கும். இது இந்த மாதத்தில் ஒரு மனிதரின் பண்பையே மாற்றி பண்போடு காட்டக் கூடிய மாதமாகும்.
இதையும் படிங்க: Sangu Poo Benefits: சங்குப்பூவின் நன்மைகள் பற்றி தெரியுமா?
அசைவம் உண்ணாமை
அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும் இடைப்பட்ட காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், வயிறு மற்றும் செரிமான நலனுக்கும் நல்லதாகவே கருதப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் விரதம் இருப்பதால் ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இப்படி பல பலன்கள் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.