Margazhi viratham procedure in tamil: கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் பிறந்தாலே தென் இந்தியாவில் அய்யப்பன் மற்றும் பழனி முருகனுக்கு மாலை அணிந்து, ஒரு மாதம் விரதமிருந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது விஷேசம். சிலர் கார்த்திகை மாதமே மாலையணிந்து விரதமிருப்பார்கள், இன்னும் சிலர் மார்கழி மாதம் மாலை அணிந்து விரதமிருப்பார்கள்.
இறைவனுக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் போது, அசைவ உணவுகளில் இருந்து தள்ளி இருப்பார்கள். அதுமட்டும் அல்ல, புகைப்பிடித்தல், மது அருந்துதல், கால்களில் செருப்பு அணிவது, மெத்தையில் படுப்பது, அழகு சாதனப்பொருள்களை உபயோகிப்பது போன்ற இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பார்கள். ஒரு மாதம் மாலை அணிந்து விரதம் இருப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!
அசைவ உணவுகளை தவிர்ப்பதன் நன்மைகள்

ஒரு மாதம் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளில் இருந்து தள்ளி இருப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும். அசைவ உணவுகள் இயற்கையாகவே சூடான தன்மை கொண்டவை. இவை பல பாதிப்புகளை தடுக்க உதவும். ஒரு மாதம் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்தால், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு மற்றும் கேன்சர் போன்ற நியோகளின் ஆபத்து குறையும்.
செரிமானம் அமைப்பு மேம்படும்: தாவர அடிப்படையிலான உணவுகளில் ஃபைபர் சத்து அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். தாவரகள் உணவுகளை சாப்பிடும் வழக்கத்திற்கு மாறுவது குடல் இயக்கத்தை சீராக்க, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? டாக்டர் கூறுவது என்ன?
உடல் எடை குறையும்: அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தி, தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவதால் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம். ஏனென்றால், அசைவ உணவுகளை விட சைவ உணவில் கலோரி குறைவாகவும், அதிக நார்ச்சத்தும் உள்ளது.
கொலட்ஸ்ராலை குறைக்கும்: அசைவ உணவில், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது, டயட்ரி கொலஸ்ட்ராலின் குறிப்பிடத்தக்க ஆதாரம். எனவே, அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
ஆற்றல் அதிகரிக்கும்: தாவர அடிப்படையிலான உணவுகளில் நிறைந்திருக்கும் வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Almonds For Eyesight: உங்க கண்பார்வை பலவீனமா இருக்கா? பார்வையை மேம்படுத்த பாதாமை இப்படி சாப்பிடுங்க!
வெறும் காலில் நடப்பதனால் ஏற்படும் நன்மைகள்

மாலை அணிந்து விரதம் இருக்கும் போது பெரும்பாலும் நாம் காலணிகளை உபயோகிப்பது இல்லை. ஒரு மாதம் வெறும் காலில் நடப்பதனால் ஏற்படும் தீமைகளை விட நன்மைகளே அதிகம்.
தூக்கமின்மை பிரச்சனை: செருப்பு அணியாமல் வெறும் காலில் நடப்பது கால்களில் சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதுடன், தசைகள், தசைநார்கள் தளர்வுகளுக்கு நல்லது. நீங்கள் நீண்ட நாட்களாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டால், இது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும்.
கண்களுக்கு நல்லது: கண்களின் ஆரோக்கியம் காக்கும் முக்கிய புள்ளி நம் பாதங்களில் இருப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். வெறும் காலில் நடக்கும் போது இந்த அழுத்த புள்ளியில் ஏற்படும் அளுத்தம், ஆரோக்கியமான கண்கள் மற்றும் கண் பார்வைக்கு உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : அறுவை சிகிச்சைக்கு பின் இதை சாப்பிடுங்க! வடு காணாமல் போகும்!
நரம்புமண்டல ஆரோக்கியம்: செருப்பு அணியாமல் வெறுங்காலில் நடப்பது பாதத்தில் காணப்படும் குறிப்பிட்ட அழுத்த புள்ளிகளை தூண்டுகிறது. இதன் விளைவாக நரம்பியல் செயல்பாடுகள் சீரடைவதோடு, சிரை நாளங்களில் ஏற்படும் வலியும் குறைகிறது.
நீரிழிவு நோய்: வெறும் காலில் நடக்கும் போது நிலத்தில் உள்ள எலக்ட்ரான்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு உங்கள் உடலில் ஏற்படும் வீக்கம், தடிப்புகளை குறைக்கிறது. இது பல வகையான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. மேலும், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது.
வெறும் தரையில் படுப்பதால் ஏற்படும் நன்மைகள்

தரையில் தூங்குவதன் மூலம், பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். தரையில் படுப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தரையில் தூங்குவது முதுகு மற்றும் இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும்,காலையில் எழுந்தவுடன் நாம் புத்துணர்ச்சியுடன் இருப்போம்.
இரவில் தரையில் தூங்குவது மன அழுத்தத்தை குறைக்கிறது. இதைச் செய்வது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதயம் மற்றும் மனம் இரண்டின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம் : Winter woes: குளிர்காலத்தில் எண்ணெய் பலகாரங்களை ஏன் குறைவாக சாப்பிட வேண்டும்?
தரையில் உறங்குவது உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் உடல் தோரணையை சரிசெய்யவும் உதவும். தரையில் தூங்குவது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்கிறது.
மது மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் நன்மைகள்

இறைவனுக்கு மாலையணிந்து விரதம் இருக்கும் போது தீய பழக்கங்களில் இருந்து தள்ளி இருப்பது வழக்கம். இதனால், நோய்களின் ஆபத்து குறைவதுடன், உடலில் பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகள் மீண்டும் குணமாக துவங்கும். அத்துடன் உடலில் நோயெதிர்ப்பு சத்தியும் அதிகரிக்கும்.
அழகு சாதனப்பொருள்களை தவிர்ப்பதன் நன்மைகள்
ஒரு மாதம் சருமத்தில் பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம், சரும பாதிப்புகள் குறையும். நாம் உபயோகிக்கும் பராமரிப்பு பொருட்களில் உள்ள கெமிக்கல் சருமத்தை சேதமாகும். இதை சில நாட்கள் தவிர்ப்பது சரும பிரச்சினைகளை மீண்டும் சரி செய்ய உதவும். அத்துடன் சருமம் இயற்கையான பொலிவையும் பெரும்.
இந்த பதிவும் உதவலாம் : Karpooravalli Benefits: இருமல் முதல் இதய நோய்வரை பல பிரச்சினைகளை நீக்கும் ஓமவல்லி இலை!
அதிகாலையில் குளிப்பதன் நன்மைகள்

மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சருமத்தின் மேற்பரப்பில் தண்ணீர் படும்போது, ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. அதிகாலையில் குளிப்பது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், அதிகாலை குளிப்பது மனா அழுத்தத்தை குறைக்கும், உடல் உஷ்ணத்தை குறைக்கும். அதிகாலையில் குளிப்பது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
Pic Courtesy: Freepik