அறுவை சிகிச்சைக்கு பின் இதை சாப்பிடுங்க! வடு காணாமல் போகும்!

  • SHARE
  • FOLLOW
அறுவை சிகிச்சைக்கு பின் இதை சாப்பிடுங்க! வடு காணாமல் போகும்!


அறுவை சிகிச்சை புண் விரைவில் ஆற உணவுகளும் உங்களுக்கு உதவும் தெரியுமா? இதனை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. இதற்காக உங்கள் வழக்கத்தில் நீங்கள் இணைக்க வேண்டிய உணவுகள் இங்கே. 

இலை காய்கறிகள்

கீரை வகைகள், முட்டைக்கோஸ் போன்ற இலை காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்த இது உதவும். மேலும் இது வீக்கத்தை குறைக்கவும் உதவும். 

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உங்களுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறது. இது சிட்ரேட் சின்தேஸ், ஹெக்ஸோகினேஸ் போன்ற நொதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவை உங்கள் காயத்தை விரைவில் ஆற்ற உதவுகிறது. 

இதையும் படிங்க: அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் என்ன சாப்பிட வேண்டும்? இதோ உங்களுக்கான பட்டியல்

பெர்ரி

பெர்ரி வகைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் காயம் விரைவில் ஆறும். மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நோய் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கிறது. 

பச்சை காய்கறிகள்

காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள் உங்கள் காயத்தை ஆற்றும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் காயத்தை ஆற்ற உதவும். 

சால்மன் மீன்

ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த சால்மன் மீனை உங்கள் உணவில் இணைத்துக்கொள்ளுங்கள். இதில் புரதம், செலினின், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி உள்ளது. இது உங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்த உதவும். 

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள உணவுகள் உங்கள் காயங்களை விரைவில் குணப்படுத்த உதவும் என்றாலும், உங்கள் வழக்கத்தில் புதிதாக சில உணவுகளை இணைக்கும் முன் மருத்துவரிடம் அணுகுவது நல்லது. 

Image Source: Freepik

Read Next

கொத்தமல்லி முதல் மேத்தி வரை.. உணவில் சேர்க்க வேண்டிய பச்சை இலைகள் இங்கே..

Disclaimer

குறிச்சொற்கள்