Benefits of fasting 2 times a week: விரதம் இருப்பது என்பது உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உடல் மற்றும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இவை ஆன்மீக ரீதியாகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் கடைபிடிக்கப்படக்கூடியதாகும். எனவே விரதம் இருக்கும் போது, சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு, நிதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். பெரும்பாலானோர், வாரத்தில் ஒரு முறை விரதம் இருப்பர். ஒரு நாள் விரதமிருப்பது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது.
அதே சமயம், வாரத்திற்கு இரண்டு நாள்கள் விரதம் இருப்பதும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடியதாகும். இதில் வாரத்தில் இருமுறை ஏன் விரதம் இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அதை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வாரத்தில் இருமுறை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதை சரியான முறையில் எப்படி செய்வது என்பது குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fasting Benefits: விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆகச்சிறந்த நன்மைகள்!
வாரத்தில் இருமுறை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சில ஆய்வுகளில், உணவுக் கட்டுப்பாட்டு விரதம் நம் உடலை சமநிலைப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் தளத்தில் குறிப்பிட்டபடி, வாரத்தில் இரண்டு நாள்கள் விரதம் இருப்பது பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க வைக்கிறது.
உடல் எடை குறைக்க
பொதுவாக உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சி மற்றும் டயட் முறைகளைக் கையாள்கின்றனர். ஆனால், எளிமையான முறையில், வாரம் இரண்டு நாள்கள் விரதம் இருப்பது விரைவில் உடல் எடையைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, எடையிழப்பு செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது.
கொழுப்பு குறைவதை அதிகரிக்க
விரதம் இருக்கும் போது, உடலுக்கு எந்த உணவையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், உடல் முன்னரே சேர்த்து வைத்த கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இதன் மூலம் உடலில் சேரக்கூடிய கொழுப்பு குறைக்கப்படுகிறது. குறிப்பாக, இது ஆற்றலாக்கப்படுவது கூடுதல் நன்மைகளைத் தருகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
விரதம் இருப்பதன் மூலம் உடலில் இயற்கையாகவே கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைவதாகக் கூறப்படுகிறது. இதனால், உடலில் உள்ள ட்ரைகிளிசிரைட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இதனால், இதயம் நன்முறையில் இயங்க விரதம் இருப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
செல்களை சரிசெய்வதற்கு
விரதம் இருக்கும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் வெளியில் இருந்து கிடைக்கப்பெறாமல், அதை உடலின் உள்ளிருந்தே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், செல்கள் சேதமடைந்தவற்றை நீக்கிவிட்டு, மீண்டும் புதுப்பிக்க வழிவகுக்கிறது. இதனால், அவை நீண்ட கால வாழ்வதுடன் நாள்பட்ட நோய்கள் ஏற்படமால் தடுக்கிறது. இவை பல ஆபத்துகளைக் குறைக்க உதவுகின்றன.
செரிமான ஆரோக்கியத்திற்கு
நாள்தோறும் உணவு உண்பதால், சில சமயங்களில் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில், விரதம் இருப்பது செரிமான மண்டலத்துக்கு ஒரு சிறிய இடைவெளியைத் தருகிறது. இது சிறப்பான குடல் ஆரோக்கியம் மற்றும் குடல் நன்முறையில் இயங்க வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருக்க போறீங்களா? இது தெரியாம இருக்காதீங்க.. அப்றம் பிரச்சனை உங்களுக்குத் தான்
வீக்கத்தைக் குறைப்பதற்கு
அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும், சில ஆய்வுகளில் வீக்கத்தை குறைக்க விரதம் உதவுவதாக கூறப்படுகிறது. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. இவை உடலில் வீக்கத்தால் ஏற்படும் வியாதிகளை குறைக்கவும் உதவுகிறது.
மனஆரோக்கியத்தை மேம்படுத்த
பலருக்கும் விரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இவை மனதை ஒருநிலைப்படுத்தி, பதட்டம் மற்றும் மனக்கவலை போன்றவற்றைத் தவிர்க்க உதவுகிறது.
விரதத்தை சரியான முறையில் இருப்பது எப்படி?
விரதம் இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால், அதற்கு சரியான முறையை பின்பற்றுவது அவசியமாகக் கருதப்படுகிறது.
இதற்கு முழுநாள் விரதம், 5 நாட்கள் வழக்கமான சாப்பாடு 2 நாட்கள் விரதம் என்ற முறையைப் பின்பற்றலாம் அல்லது 16/8 என்ற முறையைப் பின்பற்றலாம். இதில், 16 மணி நேரம் விரதம் இருக்கவேண்டும் மற்றும் 8 மணி நேரத்திற்கு என்ன வேண்டுமோ அதை சாப்பிட்டு, பிறகு அடுத்த 16 மணி நேர விரதத்தைத் தொடங்க வேண்டும்.
விரதம் இருக்கும் போது பின்பற்ற வேண்டியவை
- விரதம் இருக்கும் நபர்கள், உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதன் படி, தண்ணீர், மூலிகை தேநீர், கருப்பு காபி, டீ போன்றவற்றை சர்க்கரை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.
- சிலர் விரதத்தை முடித்த பிறகு அதிகளவு உணவு உட்கொள்வர். ஆனால், விரதம் இல்லாத போது அதிக உணவு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை உடல் எடையை அதிகரிப்பதுடன், விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பெற முடியாமல் போகலாம்.
- விரத காலங்களில் சோர்வாக உணர்வதால், உடற்பயிற்சிகளைக் கையாளலாம். எனினும், தீவிர உடற்பயிற்சியைத் தவிர்த்து, லேசான உடற்பயிற்சியைக் கடைபிடிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருக்க போறீங்களா? நிபுணர் சொன்ன இந்த குறிப்புகளை மறந்தராதீங்க
Image Source: Freepik