Purattasi Viratham: புரட்டாசி மாதம் கோவிந்த ராஜ பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பாரபட்சமின்றி ஏராளமானோர் விரதம் இருப்பார்கள். வருடத்தில் விரதம் இருக்கும் பல மாதங்களில் இந்த மாதம் என்பது பிரதான ஒன்று. புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும்.
தெய்வீக ரீதியாக பார்த்தாலும் புரட்டாசி மாதம் என்பது பல பலன்களை பெறக் கூடியா மாதமாகும், அதேபோல் அசைவம் ஏதும் சாப்பிடாமல், மது அருந்துபவர்கள் மது அருந்தாமல், தினசரி குளித்து சுத்தமாக இருப்பது என்பது உடலுக்கும் மனதுக்கும் பல பலன்களை வழங்கும்.
முக்கிய கட்டுரைகள்
புரட்டாசி மாதம் அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது?
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது ஆன்மீக ரீதியாக பல பலன்களை வழங்கும் என்றாலும் அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகள் உள்ளது. வெயில் காலத்தில் இருந்து முழுமையாக மழைக் காலத்தில் அடியெடுத்து வைக்கும் மாதம் இதுவாகும்.
இந்த காலத்தில் அசைவம், மது உள்ளிட்டவைகளில் இருந்து விலகி இருப்பது உடல்சூடு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
வெயில் டூ மழை
இந்த காலக்கட்டத்தில் செரிமானம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. திடீர் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும், அசைவும், காரமான உணவு, பொரித்த உணவு, வெளிப்புற கடை உணவு, மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளும் உடலில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் நச்சு நீங்கும்
புரட்டாசி மாதம் இப்படி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது உடலில் உள்ள கழிவு நச்சுக்களை அகற்ற பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக சனிக்கிழமை குறிப்பிட்ட வேளை உணவுகள் சாப்பிடாமல் இருப்பதும் உடல் கழிவுகளை சுத்தமாக வெளியேற்ற பேருதவியாக இருக்கும்.
எடை கட்டுப்பாடு
உடல் எடை குறைக்க வொர்க் அவுட்கள் உட்பட பலவிதமான டயட் முறைகளை மேற்கொள்கிறார்கள். வாரம் ஒருமுறை விரதம் இருந்தால் விரைவில் உடல் எடை குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
உண்ணாவிரதம் நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது என்று சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
இதய ஆரோக்கியம்
இதயப் பிரச்சனைகள் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். வாரம் ஒருமுறை விரதம் இருந்தால் இதயக் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதம் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உண்ணாவிரதம் ட்ரைகிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியம்
சிலர் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் முக்கிய உறுப்புகளுக்கு ஆபத்து அதிகம்.
உண்ணாவிரதத்திற்கு அடுத்த நாள், அவர்கள் முந்தைய நாள் சாப்பிடாததை விட அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்வது நல்லதல்ல.
உண்ணாவிரதம் இருப்பது இதுபோன்ற பல நன்மைகளை வழங்கும் என்றாலும் உங்கள் உடலின் தன்மையை அறிந்து முறையான வழிகாட்டுகளை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். உங்கள் உடலின் தன்மைகளை முறையாக அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்.
விரதம் இருப்பது நல்லது என்றாலும் உங்கள் உடல் ஏதேனும் நோய் பாதிப்பில் இருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik