$
Health Benefits Of Soaked Peanuts: பொதுவாக பலர் ஊற வைத்த பாதாம், திராட்சை அல்லது அத்திப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால், ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிட்டுள்ளீர்களா? இதனை சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம்.
ஏலைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் வேர்கடலை, சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்து திகழ்கிறது. 100 கிராம் வேர்க்கடலையில் இருந்து சுமார் 567 கலோரிகள் கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு,

இதய நோயில் இருந்து விடுபட..
இதய நோயில் இருந்து விலக ஊறவைத்த நிலக்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் 3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. நீண்ட காலத்திற்கு மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கிறது. வேர்க்கடலை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. உடல் வெப்பநிலையை 5 அதிகரிக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
தசை வளர்ச்சி
வேர்க்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஊறவைத்த வேர்க்கடலை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. தசைச் சிதைவைத் தடுக்கிறது. ஊறவைத்த வேர்க்கடலையை அதிகாலையில் சாப்பிடுவது வலிமையான உடலை விரும்புபவர்களுக்கு நன்மை பயக்கும். இதில் புரதத்துடன், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
இதையும் படிங்க: Weight Loss Tips: அசால்ட்டா எடையை குறைக்க… இதையெல்லாம் மட்டும் சாப்பிடுங்க போதும்!
எடை கட்டுப்பாடு
வேர்க்கடலை நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும். இவற்றை சாப்பிட்டால், உடனே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இது மற்ற உணவுகளை நாம் உட்கொள்வதை குறைக்கிறது. இதனால் உடல் எடை கட்டுப்படும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
நார்ச்சத்து நிறைந்த உணவு செரிமானத்திற்கு உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. ஊறவைத்த வேர்க்கடலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயு மற்றும் அமிலத்தன்மை குறைகிறது.
இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுப் பட்டியலில் வேர்க்கடலையும் உள்ளது. இதனை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சீராக இருக்கும். அதுமட்டு மின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன.
புற்றுநோயை தடுக்கும்
ஊறவைத்த வேர்க்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும் உடலில் வீரியம் மிக்க செல்கள் வளராமல் தடுக்கிறது. வேர்க்கடலையில் இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை அனைத்தும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. வேர்க்கடலையில் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இது தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்கிறது.
முதுகுவலியில் இருந்து நிவாரணம்
இப்போதெல்லாம் பலர் வீட்டிலிருந்து நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்வதால் முதுகுவலி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. ஊறவைத்த வேர்க்கடலையை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும்.

நினைவாற்றலை மேம்படும்
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்கள் பார்வை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ஊறவைத்த வேர்க்கடலையை அதிகாலையில் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
இருப்பினும் வேர்க்கடலையில் கலோரிகளும் அதிகம் என்பதால், அதிகமாக உட்கொள்ள வேண்டாம். புரதச்சத்தும் அதிகமாக இருப்பதால், அவை செரிமான அமைப்பில் சுமையை அதிகரிக்கும். எனவே இரவு நேரங்களில் இவற்றை சாப்பிட வேண்டாம் என உணவு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த தகவல் பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. முடிவுகள் தனிநபரின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே இவற்றைப் பின்பற்றும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik