இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருக்க போறீங்களா? நிபுணர் சொன்ன இந்த குறிப்புகளை மறந்தராதீங்க

How to do intermittent fasting properly: இன்று பலரும் உடல் எடையைக் குறைப்பதற்கு இடைவிடாத உண்ணாவிரதத்தை பலரும் அனுபவிக்கின்றனர். ஆனால், சிலருக்கு இந்த விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதில் இடைவிடாத உண்ணாவிரதத்தை சரியான முறையில் எப்படி இருப்பது என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருக்க போறீங்களா? நிபுணர் சொன்ன இந்த குறிப்புகளை மறந்தராதீங்க


How to do intermittent fasting correctly: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல வகையான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். எனவே தான் பலரும் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது, சீரான உணவுமுறை மற்றும் பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது உள்ளிட்ட முறைகளைக் கையாள்கின்றனர். இந்த வரிசையில் இடைவிடாத உண்ணாவிரத முறையும் அடங்கும்.

பொதுவாக, இடைவிடாத உண்ணாவிரதம் (IF) என்பது இரண்டு குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு இடையில் சுழற்சி முறையில் நடைபெறும் ஒரு வகை உணவு முறை ஆகும். ஆனால், பலருக்கும் இந்த உண்ணாவிரதத்தை எப்படி இருப்பது என்பது பற்றி தெரிவதில்லை. எனவே தான் பலருக்கு இந்த விரத்தத்தில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் குழப்பமடைகின்றனர். சில பிரபலமான முறைகளில் 16:8, 5:2, மாற்று நாள் உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் உணவு (OMAD) போன்றவை அடங்கும்.

இடைபட்ட உண்ணாவிரதம் உணவு நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கலோரி உட்கொள்லலைக் குறைக்கிறது. இந்த உணவுமுறை எடையிழப்பை ஊக்குவிக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழிகாட்டுதலுக்காக ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Intermittent Fasting: இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுமா?

இடைபட்ட உண்ணாவிரதமுறை

லோவ்னீத் பாத்ரா அவர்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் இடைவிடாத உண்ணாவிரதத்தின் அனைத்து அம்சங்களையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "இடைவிடாத உண்ணாவிரதத்தை முயற்சிப்பதா? அதை எப்படிச் சரியாகச் செய்வது என்பது இங்கே. உண்ணாவிரதம் உங்களுக்கு வேலை செய்யும் - ஆனால் நீங்கள் அதை சரியான முறையில் செய்தால் மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைவிடாத உண்ணாவிரதத்தை சரியாகப் பயிற்சி செய்வதற்கான உதவிக்குறிப்புகள்

ஏற்ற உண்ணாவிரத பாணியைத் தேர்வு செய்வது

இடைவிடாத உண்ணாவிரதத்தை எளிதாகத் தொடங்க வேண்டும். 16:8 நேர முறையில் 16 மணி நேரம் உண்ணாவிரதம், 8 மணி நேரத்திற்குள் சாப்பிடுவதும், 5:2 முறையில் சாதாரண உணவு 5 நாட்கள், 2 என்று கட்டுப்படுத்துவது மற்றும் மாற்று நாள் உண்ணாவிரதம் போன்றவற்றைக் கையாள வேண்டும்.

கருப்பு காபியைத் தவிர்ப்பது

வெறும் வயிற்றில் காபி குடிப்பது கார்டிசோலை அதிகரிப்பதுடன், குடலை எரிச்சலடையச் செய்யலாம். இந்நிலையில், கார்டிசோலை சமநிலையுடன் வைக்க நீரேற்றம் மற்றும் எலுமிச்சை நீரில் ஒரு சிட்டிகை இளஞ்சிவப்பு உப்பு போன்றவற்றைச் சேர்க்கலாம்.

உணவு நேரத்தில் உடலுக்கு எரிபொருள் கொடுப்பது

முட்டை, மீன், பருப்பு போன்ற புரத உணவுகள், நெய், கொட்டைகள், வெண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற முழு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுவது எடை குறைக்க உதவுமா.? நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்..

உணவை நேரமாக சாப்பிடுவது

நாள் தொடக்கத்தில் சாப்பிடுவது இரத்த சர்க்கரை, செரிமானம் மற்றும் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே படுக்கைக்குக் குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீரேற்றமாக இருப்பது

உண்ணாவிரத காலத்தில் தண்ணீர் அருந்துவது அவசியமாகும். இவை சோர்வு அல்லது சோம்பலைத் தவிர்க்க உதவுகிறது.

உண்ணாவிரதத்தை மெதுவாக முடிப்பது

ஓட்ஸ், ஸ்மூத்திகள், புளித்த உணவுகள் அல்லது லேசான பருப்பு-அரிசி-காய்கறி சேர்க்கைகளுடன் உணவை எளிதாக உட்கொள்ளலாம்.

மெதுவாகத் தொடங்கி படிப்படியாக அதிகரிப்பது

12 மணி நேர உண்ணாவிரதத்துடன் தொடங்கி படிப்படியாக அதிகரிக்க வேண்டும். பசி வேதனை, மூளை மூடுபனி அல்லது சோர்வு போன்றவை ஏற்பட்டால், வழக்கத்தை சரிசெய்ய வேண்டும். ஏனெனில், உண்ணாவிரதம் என்பது அனைவருக்கும் பொருந்தாது.

நல்ல தூக்கம் மற்றும் இயக்கம்

7-8 மணிநேர சீரான தூக்கம், யோகா அல்லது நடைபயிற்சி போன்ற லேசான செயல்பாடுகளைச் செய்வது உண்ணாவிரதத்தின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருக்க போறீங்களா? இது தெரியாம இருக்காதீங்க.. அப்றம் பிரச்சனை உங்களுக்குத் தான்

Image Source: Freepik

Read Next

வெயிட் மடமடனு குறையணுமா? பார்லியை இந்த வழிகளில் எடுத்துக்கோங்க

Disclaimer