Thu Oct 29, 2026 | 12:54 PM IST

Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!

Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!

Peanut Jaggery Chikki Benefits in Tamil: குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க நாம் அடிக்கடி சூடான உணவுகளை சாப்பிடுவோம். ஏனெனில், இதன் மூலம் உடலை வெப்பமாக வைக்க உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும். இனிப்பு யாருக்குத்தான் பிடிக்காது. அணைப்பு சாப்பிட நாம் நேரம் காலம் பார்ப்பதில்லை. வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களும் குளிர்காலத்தில் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. வெல்லம் லட்டு, வெல்லம் பாயாசம், ஹல்வா அல்லது அதிரசம் போன்றவை.

குறிப்பாக குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி அடிக்கடி சாப்பிடுவோம். வேர்க்கடலை மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் இந்த மிட்டாய் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. குளிர்காலத்தில் வேர்க்கடலை மிட்டாய் சாப்பிடுவதன் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் :

வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள் என்ன?

செரிமானத்திற்கு நல்லது

குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். வெல்லம் மற்றும் வேர்க்கடலை இரண்டும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. வேர்க்கடலை பர்பி சாப்பிடுவது மிகவும் நல்லது. இதை உணவு சாப்பிட்ட பிறகு அல்லது சிற்றுண்டி நேரத்தில் சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க

வேர்க்கடலை பர்பியில் கலோரி அளவு குறைவு. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் நீண்ட நேரம் பசியை உணர மாட்டீர்கள். இதன் காரணமாக அடுத்த உணவில் நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்கிறீர்கள். இது உங்கள் உணவு பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் :

நோய் எதிர்ப்பு சக்தி

வேர்க்கடலை பர்பி சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வெல்லம் மற்றும் வேர்க்கடலை இரண்டும் இயற்கையில் சூடான தன்மை கொண்டது. மேலும், வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக, நீங்கள் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படும் அபாயத்தை தடுக்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

வெல்லத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை டீடாக்ஸ் செய்வதற்கும் இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கு உதவும். இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும் இரத்த சோகையை தடுக்கவும் உதவுகிறது. எனவே, வேர்க்கடலை பர்பி இரத்தத்தை நச்சு நீக்க ஒரு நல்ல வழி. வேர்க்கடலை பர்பி குளிர்காலத்தில் உங்களுக்கு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது.

வேர்க்கடலை பர்பி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 3 கப்.
நெய் - தேவையான அளவு.
வெல்லம் - 200 கிராம்.
தண்ணீர் - தேவைக்கேற்ப.
ஏலக்காய்- 7-8.

செய்முறை:

  • முதலில் வேர்க்கடலையை தோல் நீக்கி நெய்யில் வறுக்கவும். அதிகம் வறுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் வேர்க்கடலை பர்பி கசப்பாக மாறும்.
  • கடாயில் வெல்லத்தை உருக்கி, சிரப் தயார் செய்யவும். சிரப் ஒட்டாமல் இருக்க, அதில் சிறிது வெந்நீரைச் சேர்த்துக் கொண்டே இருக்கவும்.
  • இப்போது அதனுடன் வேர்க்கடலை சேர்த்து கலவையை நன்கு கலக்கவும். அதனுடன் ஏலக்காயையும் சேர்க்கவும்.
  • இப்போது அதை ஒரு தட்டில் ஆறவைத்து, வடிவங்களாக வெட்டி வேர்க்கடலை பர்பி தயார் செய்யவும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Broccoli Soup: ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைக்கணுமா? அப்போ இந்த சூப் குடியுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.