$
பர்பி, சுண்டல், நியூட்ரிஷன் பார், என எந்த வகையில் கொடுத்தாலும் வேர்க்கடலை சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு பிடித்த தின்பண்டமாக உள்ளது. அவற்றைப் பச்சையாக, வேகவைத்து, பொரித்து, சட்னியாகச் செய்து, கறிகளில் சேர்த்து, எத்தனையோ வகைகளில் சாப்பிடுவார்கள். இதனால், உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும்.
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள்:
வேர்க்கடலையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் நியாசின், ஃபோலேட், தியாமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஈ, உணவு நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

சுவை மற்றும் மொறு மொறுப்பிற்காக வறுக்கப்பட்ட வேர்க்கடலைகள் பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது. இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அளவாக உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். அதிகமாக எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் வரும்.
உடல் எடையைக் குறைக்க இப்படி சாப்பிடுங்க:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வேகவைத்த வேர்க்கடலையைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றைக் கலந்து இரவு உணவு மற்றும் காலை உணவின் போது சாப்பிடலாம்.

இதில் புரதச்சத்து அதிகம். இவற்றை எடுத்துக் கொண்டால் பசி கட்டுப்படும். நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர்வீர்கள். இதனால் அதிக கலோரி உட்கொள்ளவது கட்டுப்படுத்தப்பட்டு, எடை குறையும்.
சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலையை வறுத்து வேகவைத்து சாப்பிடலாம். ஆனால், வேகவைத்த வேர்க்கடலை வறுத்ததை விட மிகவும் சிறந்தது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே, வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.
வறுத்த வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்?
வறுத்த வேர்க்கடலையை தோலை நீக்கி விட்டு ப்பிடுவார்கள். ஆனால், அதன் தோலில் நார்ச்சத்து மட்டுமின்றி என்சைம்களும் உள்ளன. வேர்க்கடலையின் தோலில் உள்ள மூலக்கூறுகள் உடலில் பித்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
யாரெல்லாம் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது?
அதிக பிபி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது எனக்கூறப்படுகிறது. ஆனால், பருப்பு வகைகள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக வேகவைத்த வேர்க்கடலையை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அளவாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலை அதிகரிக்காத நார்ச்சத்து உள்ளது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். எனவே, இதயப் பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் மகிழ்ச்சியுடன் வேர்க்கடலையைச் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.
வறுத்த வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது என்றில்லை, ஆனால் மசாலா கலந்து, எண்ணெயில் பொறித்து சாப்பிடக்கூடாது. இது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
Image Source: Freepik