$
வெயிட் லாஸ் என்று வரும்போது, மக்கள் பெரும்பாலும் ஜிம்மில் நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி உடற்பயிற்சியை விட உணவுக்கட்டுப்பாடே உடல் எடையை விரைவாக குறைக்க உதவுவதாக தெரிகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, எடை இழப்புக்கு முக்கியமானது உடற்பயிற்சியுடன் கூடிய சீரான உணவாகும். நீங்கள் உடல் எடையை குறைக்க திட்டமிட்டு இருந்தால், முதலில் உங்கள் ஸ்நாக்ஸ் பழக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க மறக்காதீர்கள்.
இந்த செயல்பாட்டில், எடை இழப்பை ஊக்குவிக்கும் வேர்க்கடலையை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். அவை கலோரிகளில் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தாலும், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளதால், நீண்ட நேரம் முழுதாக இருக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும். விரும்பிய முடிவுகளுக்கு இதை எப்படி உங்கள் உணவில் சேர்க்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
100 கிராம் வேர்க்கடலையில் 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 50 கிராம் கொழுப்பு உள்ளது. நார்ச்சத்து மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் இதில் நிறைந்துள்ளது.

வேர்க்கடலை தாவர அடிப்படையிலான புரதத்தைக் கொண்டுள்ளதால், இது எடை குறைக்க உதவுகிறது. இந்த உயர் புரதம் மற்றும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் நாம் உணவு உண்பது குறைவு. அதாவது நம்மை அறியாமலேயே உடல் எடை குறைகிறது.
உடல் எடையை குறைக்க வேர்க்கடலை உதவுமா?
தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, புரதம் கலோரிகளை எரிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். வேர்க்கடலை நார்ச்சத்து, புரதம் மற்றும் இதய ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

வேர்க்கடலையில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், அவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டியுள்ளதால், அவை சின்ன சின்ன கலோரிகளாக உடைக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக கொழுப்புச்சத்தால் ஆபத்தில்லையா?
வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFAs) மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (PUFAs) எனப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை வீக்கம், உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்கின்றன.

பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும், கொட்டைகளில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம், சேமிக்கப்பட்ட கொழுப்பை ஆற்றலாகப் பயன்படுத்துவதற்கான உடலின் திறனை மேம்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெட்டபாலிசத்தில் மாற்றம்:
வேர்க்கடலை ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் வொர்க் அவுட் செய்யும் போது மட்டுமல்ல, ஓய்வெடுக்கும் தருணத்தில் கூட உடல் தானாகவே அதிக கலோரிகளை எரிக்கும். இது எடையிழப்புக்கு மிகவும் உதவுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, வேர்க்கடலை பச்சையாக, வறுத்த அல்லது வேகவைத்த வடிவத்தில் உட்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடலைமாவு, கடலை எண்ணெய், வறுத்த வேர்க்கடலை, வேர்க்கடலை துவையல் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். விரும்பிய முடிவுகளைப் பெற, புரதம் நிறைந்த உணவுகளான வறுக்கப்பட்ட கோழி, டோஃபு, பனீர் அல்லது சாலட்களில் சேர்க்கவும்.
பீனட் பட்டர் ஆரோக்கியமானதா?
வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Buttert) உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்காமல் கொழுப்புகள் மற்றும் புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உட்கொள்ளும் ஒரு வழியாக இது கருதப்படுகிறது.

வெயிட் லாஸை கடைபிடிப்போர் செயற்கை சர்க்கரை மற்றும் குறைந்த அளவிலான சோடியம் கொண்ட பீனட் பட்டர்களை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். 2 முதல் 3 ஸ்பூன் பீனட் பட்டரை ஒருவர் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை எடுத்துக்கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.