
Health Benefits of Eating Chicken Every Day: அசைவ பிரியர்கள் பலருக்கு தினமும் சிக்கன் சாப்பிடும் பழக்கம் இருக்கும். குறிப்பாக ஜிம் செல்பவர்கள் அடிக்கடி அசைவம் சாப்பிடுவார்கள். ஆனால், நம்மில் பலர் தினமும் சிக்கன் சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என நம்புகின்றனர். இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
சிக்கனில் புரதம், வைட்டமின் பி 12, கோலின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இவற்றை அளவாக தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அந்தவகையில், தினமும் சிக்கன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் எவ்வளவு சாப்பிடலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெங்காயம் சாப்பிடுவதால் இந்த நோயெல்லாம் குணமாகும்; இதன் நன்மைகள் இங்கே!
ஒரு நாளைக்கு எவ்வளவு சிக்கன் சாப்பிடலாம்?
100 கிராம் கோழி மார்பகத்தின் 124 கிலோகலோரி, 20 கிராம் புரதம் மற்றும் 3 கிராம் கொழுப்பு உள்ளது. எனவே, நீங்கள் 65-75 கிலோ எடையுள்ள சராசரி நபராக இருந்தால், ஒரு நாளைக்கு சுமார் 200 கிராம் வரை சிக்கன் சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சளி, காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை என பல தொற்றுகளுக்கு இன்றும் சிக்கன் சூப் வீடுகளில் கொடுக்கப்படுகிறது. இது நாசி மற்றும் தொண்டை நெரிசலை குறைக்கும். சிக்கன் சூப் நியூட்ரோபில்களின் இடம்பெயர்வைத் தடுக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றனர். இது ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணுக்கள், இதன் மூலம் பொதுவான தொற்றுநோய்களின் போது ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
முழுமையான உணவு
சிக்கன் புரதத்தின் சிறந்த மூலம். எனவே, கொஞ்சமான சாப்பிட்டாலும் நிறைவான உணவு எடுத்துக்கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவே, உங்கள் தீராத பசியை அடக்க சிறிதளவு சிக்கன் சாப்பிட்டால் போதும். இதனால், உங்களின் உடல் எடையும் சரியாக மேம்படுத்த உதவும். அதே போல, சிக்கனில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்.
இந்த பதிவும் உதவலாம்: ஆண்களே அந்த விஷயத்துக்கு இனி முருங்கைக்காய் வேண்டாம்... வெறும் வயிற்றில் இதை 2 துண்டு சாப்பிடுங்க!!
நினைவாற்றல் அதிகரிக்கும்
கோழிக்கறியில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. இயல்பாகவே அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். அதே போல, சிக்கன் குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நரம்பு மண்டலம் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்தது
சிக்கனில் புரதம், கலோரிகள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை, நமது உடலின் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் சரியான அளவை வழங்குகிறது. மேலும், இதில் டிரிப்டோபான் மற்றும் வைட்டமின் பி 5 உள்ளதால் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது.
எலும்புகள் வலுவடையும்
சிக்கனில் புரதம் தவிர பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுவாக்குகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுப்பதோடு, இதில் உள்ள செலினியம் கீல்வாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆண்கள் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கட்டுப்படுத்தவும், விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
எடை மேலாண்மை
கோழி மெலிந்த புரதத்தின் சிறந்த மூலமாகும். இது திசுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும், தசை வெகுஜனத்தை பராமரிப்பதற்கும், ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டை ஆதரிப்பதற்கும் அவசியம். கோழி எடை இழப்பு அல்லது எடை பராமரிப்புக்கான ஆரோக்கியமான, சீரான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஏனெனில், இது ஒரு மெலிந்த புரத மூலமாகும், இது திருப்திக்கு உதவும். கோழி பி வைட்டமின்கள் (B6, B12, நியாசின்), செலினியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. அவை ஆற்றல் உற்பத்தி, மூளை ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.
இந்த பதிவும் உதவலாம்: சாப்பிடும் போது கீழ உக்காந்து சாப்பிடுங்க.. அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்..
உடல்சோர்வை நீக்கும்
பொதுவாக இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். இவர்கள் சிக்கன் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். அதே சமயம் நிம்மதியான உறக்கத்திற்கு உதவும். மேலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் உடல் ரீதியிலான பிரச்சனைகளை நீக்கும்.
இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்
சிக்கனில் வைட்டமின் பி 6 நிறைந்திருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கிறது. வைட்டமின் பி 6 மாரடைப்பு அபாயத்துடன் இணைக்கப்பட்ட முக்கிய கூறுகளில் ஒன்றான ஹோமோசைஸ்டீனின் அளவை குறைக்கிறது. இது தவிர, கோழி நியாசினின் சிறந்த மூலம். இது இதய நோய்க்கு வழிவகுக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகவும் இருப்பதால் இதயத்திற்கு நல்லது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
சிக்கன் சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிக்கனில் உள்ள சேர்மங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை குறைப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
Pic Courtesy: Freepik
Read Next
Karuveppilai Nanmaigal: தலை முடி முதல் உடல் எடை குறைப்பு வரை கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version