Cucumber For Weight Loss: கிடுகிடுவென உடல் எடை குறைய... தினமும் 2 துண்டு வெள்ளரி போதும்!

  • SHARE
  • FOLLOW
Cucumber For Weight Loss: கிடுகிடுவென உடல் எடை குறைய... தினமும் 2 துண்டு வெள்ளரி போதும்!

வெள்ளரிக்காயை எப்படி சாப்பிடலாம்?

வெள்ளரிக்காய் சாப்பிடும் போது, ​​பச்சையாக சாப்பிடுவது நல்லது. தினமும் குறைந்தது இரண்டு வெள்ளரிக்காய் உட்கொள்ளலாம். நாம் அன்றாடம் உண்ணும் சாலட்களில் சில துண்டு பச்சை வெள்ளரிக்காய்காய்களை சேர்க்கலாம்.

அசைவ சாலட்டாக இருந்தாலும் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம். தோலுடன் அல்லது தோலில்லாமல் சாப்பிடலாம். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். வெள்ளரிக்காயில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு வெள்ளரிகள் சாப்பிடலாம். இதையும் தண்ணீர் அருந்தாமல் சாப்பிடலாம்.

இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு. காலையில் இரண்டு அல்லது மூன்று வெள்ளரிக்காய் துண்டுகளை சாப்பிட்டு உங்கள் நாளைத் தொடங்கலாம். இது நமது வயிற்றுக்கு தேவையான நீரேற்றத்தையும் அளிக்கும்.

இதனால் நமது எடை அதிகரிக்காது. வெள்ளரிக்காய் நமது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

ஏனெனில் வெள்ளரியில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது. இவை அனைத்தும் நமது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்கள் நம்மைத் தேடி வராது. அவை இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகின்றன. இது நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது.

Image Souce: Freepik

Read Next

Metabolism Boosting Tips: மெட்டபாலிசத்தை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்!

Disclaimer

குறிச்சொற்கள்