
Bone Broth மற்றும் Bone Marrow – எது உண்மையில் எடை குறைக்க உதவும்? எலும்பு சூப் மற்றும் எலும்பு மஜ்ஜையின் வேறுபாடுகளை டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் விளக்குகிறார். ஆரோக்கியத்துக்கும் எடைக்குறைக்கவும் எது சிறந்தது என்பதை அறியுங்கள்.
Bone Marrow – அதிக கலோரி, சுவை நிறைந்தது
Bone Marrow என்பது எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜை பகுதி. இது வெண்ணெயைப் போலவே கொழுப்பு சத்து (Fat) நிறைந்தது. 100 கிராம் Bone Marrow-வில் சுமார் 800 கலோரி உள்ளது. இதில் Omega-3 fatty acids, இரும்புச்சத்து (Iron), Vitamin A, Vitamin K2 போன்றவை நிறைந்துள்ளன. ஆனாலும், எடைக்குறைப்பதற்கான உணவாக இதை எடுத்துக்கொள்வது சாலச்சிறந்ததல்ல, ஏனெனில் அதிக கலோரி உடலில் சேமித்து கொழுப்பை அதிகரிக்கும். சுவைக்காக சில நேரங்களில் சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் எடைக்குறைப்பதற்கு தடையாக இருக்கும்.
Bone Broth – குறைந்த கலோரி, ஆரோக்கியம் தரும்
Bone Broth என்பது எலும்புகளை நீண்ட நேரம் மெதுவாக கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் சூப். 100 மில்லிலிட்டர் Bone Broth-ல் 50–60 கலோரி மட்டுமே உள்ளது. சமைக்கும் போது எலும்பிலிருந்து Collagen, Gelatin, Calcium, Magnesium போன்ற சத்துக்கள் வெளிப்படும். கொழுப்பை நீக்கினால், இது மிகச் சுலபமாக ஜீரணமாகும், மேலும் Protein-rich broth என்பதால் பசியை அடக்கி நீண்ட நேரம் நிறைவான உணர்வு தரும். எடைக்குறைப்பதற்கு மிகவும் ஏற்றது.
எலும்பு சூப்பின் நன்மைகள்
* எடை குறைப்பு (Weight loss) – குறைந்த கலோரி, அதிக புரதம்.
* மூட்டு ஆரோக்கியம் (Joint health) – Collagen மற்றும் Gelatin மூட்டு வலியை குறைக்கும்.
* சருமம் (Skin) – Collagen உற்பத்தியை மேம்படுத்தி சுருக்கங்களைத் தடுக்கும்.
* ஜீரண ஆரோக்கியம் (Digestion) – குடல் பாக்டீரியாவை (Gut bacteria) சீராக வைத்துக்கொள்கிறது.
* உடல் உற்சாகம் (Energy) – இயற்கை கனிமச் சத்துகள் (Minerals) உடலுக்கு சக்தி தருகின்றன.
எலும்பு சூப்பை எப்படி பயன்படுத்தலாம்?
* சூப்பாக நேரடியாகக் குடிக்கலாம்.
* காய்கறி சூப், சாம்பார், கறி போன்றவற்றுக்கு base ஆகப் பயன்படுத்தலாம்.
* காலை நேரத்தில் protein tea போல சூடாகக் குடித்தால் பசியை அடக்கி, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
View this post on Instagram
நிபுணர் கருத்து – Dr. Santhosh Jacob
ஆர்த்தோபெடிக் & ஸ்போர்ட்ஸ் சர்ஜன் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறுவதுபடி, Weight loss க்கு Bone Broth சிறந்த தேர்வு. Bone Marrow-ல் சத்துக்கள் இருந்தாலும், அதிக கலோரி காரணமாக எடை குறைக்க விரும்புபவர்கள் தவிர்க்க வேண்டும். Bone Broth-ஐ அடிக்கடி உணவில் சேர்த்தால், அது ஆரோக்கியத்துக்கும், எடைக்குறைக்கவும் உதவும்.
இறுதியாக..
எலும்பு மஜ்ஜை (Bone Marrow) சுவைக்க occasional indulgence ஆக சாப்பிடலாம். ஆனால் எடைக்குறைக்க விரும்புபவர்கள் Bone Broth-ஐ தேர்வு செய்ய வேண்டும். குறைந்த கலோரி, அதிக புரதம், முக்கிய கனிமச் சத்துகள் ஆகியவற்றால் Bone Broth உடல் ஆரோக்கியத்தையும், எடை கட்டுப்பாட்டையும் சிறப்பாகப் பாதுகாக்கும்.
{Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனையாகாது. எந்தவொரு புதிய உணவு முறையையும் துவங்குவதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது போஷண நிபுணரின் ஆலோசனை பெறவும்.}
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 15, 2025 20:59 IST
Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி