Doctor Verified

ராகி மாவு தோசை Vs அரிசி மாவு தோசை.. உடல்நலத்துக்கு எது சிறந்தது.? மருத்துவர் கருத்து..

ராகி தோசை மற்றும் அரிசி தோசை – எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? கலோரி, புரதம், நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் அடிப்படையில் மருத்துவர் சாந்தோஷ் ஜேகப் கூறிய உண்மைகள். முழு விவரங்கள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
ராகி மாவு தோசை Vs அரிசி மாவு தோசை.. உடல்நலத்துக்கு எது சிறந்தது.? மருத்துவர் கருத்து..


தினசரி காலை உணவில் அதிகம் இடம்பெறும் உணவுப் பொருள் தோசை. ஆனால், ராகி மாவு தோசை நல்லதா? அல்லது அரிசி மாவு தோசை நல்லதா? என்ற கேள்வி பலரையும் குழப்புகிறது. இதுகுறித்து Muscle Centric Orthopedic & Sports Surgeon ஆன மருத்துவர் சாந்தோஷ் ஜேகப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, இரண்டிலும் கலோரி அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், நார்ச்சத்து, சத்துக்கள், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அடிப்படையில் ராகி தோசை சிறந்ததாகும்.

கலோரி & புரதம்

* 100 கிராம் ராகி தோசையில் (எண்ணெய் இல்லாமல்) சுமார் 130–150 கலோரி, 30 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம் இருக்கும்.

* அதேபோல், அரிசி தோசையிலும் சுமார் அதே அளவு கலோரி மற்றும் புரதம் உள்ளது.

* அதனால், கலோரி & புரதம் அடிப்படையில் இரண்டும் சமமாகவே கருதப்படுகின்றன.

நார்ச்சத்து & சத்துக்கள்

* ராகி தோசையின் நார்ச்சத்து (Fiber) அரிசி தோசையை விட நான்கு மடங்கு அதிகம்.

* அதில் இரும்பு, கால்சியம், மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம்.

* முக்கியமாக, Glycemic Index குறைவாக இருப்பதால், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ராகி தோசை சிறந்தது.

* இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி தோசை மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Dosa: உடல் எடை குறைய புரோட்டீன் நிறைந்த ராகி பச்சைப்பயிறு தோசை செய்முறை!

புரதத்தை அதிகரிக்க – எளிய டிப்ஸ்

ராகி தோசையில் புரதம் குறைவாக இருப்பதால், அதனை முட்டை வெள்ளை (Egg white) அல்லது Rice protein powder சேர்த்து சமைத்தால், சுவை மாறாமல் புரதம் அதிகரிக்கிறது.

சரியான காம்போ – சைடு டிஷ் முக்கியம்

ராகி தோசையை மட்டும் சாப்பிடாமல், அதனை மாமிசம், சோயா, முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் முழுமையான ஆரோக்கியமான உணவு (Balanced meal) கிடைக்கும்.

எண்ணெய் கட்டுப்பாடு

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சுமார் 100 கலோரி சேர்க்கும். அதனால், அதிக எண்ணெயில் சமைக்காமல் Spray oil (1 spray = 1 ml) பயன்படுத்தலாம். இது எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த வழி.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS.,DNB,MCh Ortho, DABRM (USA) (@drsanthoshjacobacademy)

மருத்துவர் கருத்து

ராகி தோசை, குறைந்த Glycemic Index காரணமாக அரிசி தோசையை விட ஆரோக்கியமானது. ஆனால், புரதம் அதிகரிக்க சைடு டிஷ் மற்றும் சில மாற்றங்கள் அவசியம். எண்ணெய் கட்டுப்பாடு, சீரான காம்போ ஆகியவற்றை பின்பற்றினால் ராகி தோசை ஒரு சிறந்த ஹெல்தி பிரேக்பாஸ்ட் ஆக மாறும் என மருத்துவர் சாந்தோஷ் ஜேகப் கூறுகிறார்.

இறுதியாக..

* அரிசி தோசை – எளிதில் ஜீரணமாகும், ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு அல்ல.

* ராகி தோசை – அதிக நார்ச்சத்து, அதிக சத்துக்கள், குறைந்த Glycemic Index என்பதால் நீண்டநாள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

* எனவே, உடல்நலத்தை பாதுகாக்க விரும்புவோர், ராகி தோசையை அடிக்கடி தேர்வு செய்யலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணரின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.

Read Next

சியா விதைகளை சாப்பிடும்போது இந்த 7 தவறுகளைச் செய்யாதீர்கள்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 24, 2025 17:32 IST

    Published By : Ishvarya Gurumurthy