Aval Vs Rice: ஆரோக்கியத்தில் சிறந்தது எது.? வெள்ளை அரிசியா.? அவலா.?

  • SHARE
  • FOLLOW
Aval Vs Rice: ஆரோக்கியத்தில் சிறந்தது எது.? வெள்ளை அரிசியா.? அவலா.?


Which Is Better Aval Or Rice: இந்தியாவின் வடக்கு பகுதிகளில், போஹா என்று அழைக்கப்படும் அவல் உப்புமா, காலை உணவின் ஒரு அங்கமாக திகழ்கிறது. தற்போது இது தென் இந்திய பகுதிகளில் பிரலமடைந்து வருகிறது. 

ஆனால் வெள்ளை அரிசி நல்லதா? அவல் நல்லதா? என்ற கேள்வி மக்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில் எது சிறந்தது? ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகமாக கொண்டது எது? என்பதை இங்கே விரிவாக காண்போம். 

வெள்ளை அரிசியா.? அவலா.? எது சிறந்தது.? 

வெள்ளை அரிசி எப்படி கிடைக்கப்படுகிறது தெரியுமா? அரிசி பாலீஷ் செய்யப்படும் போது வெள்ளையாக மாறுகிறது. இதில் ஆர்சனிக் அதிக அளவு உள்ளது. நாம் நீண்ட காலம் ஆர்சனிக் எடுத்து வந்தோம் என்றால், தோல், நரம்பு மண்டலம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். 

அவல் (போஹா) பொறுத்தவரை, இதில் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. இதில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை பாலீஷ் செய்யப்படுவதில்லை. செரிமான பிரச்னைகளை தீர்க்க இது சிறந்து திகழ்கிறது.  எனவே அரிசியுடன் ஒப்பிடுகையில் அவல் சிறந்தது என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தயிர் Vs மோர் - ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

அவல் ஊட்டச்சத்து உள்ளடக்கம்

100 கிராம் அவலில் 70 கிராம் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

100 கிராம் அவலில் 2 முதல் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். 

அவல் சாப்பிடும் போது உடலில் இரும்புச்சத்து கணிசமாக அதிகரிக்கிறது. இது இரத்த சோகையை தடுக்கிறது. மேலும் இரத்த எண்ணிக்கையை அதிகரிக்கிறது. 

அவலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது சருமம் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. 

அவலில் நல்ல அளவிலான புரதங்கள் உள்ளன. இதை காலை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, உங்கள் நாலை மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் தொடங்க உதவுகிறது. குறிப்பாக இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.

Image Source: Freepik

Read Next

Belly Fat Reason: தொப்பை கொழுப்பு ஏன் ஏற்படுகிறது? குறைக்க உதவும் வைத்தியம்!

Disclaimer

குறிச்சொற்கள்