Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Doctor Verified

சியா நீர் vs சீரக நீர்: எடை இழப்புக்கு எது சிறந்தது? மருத்துவர் விளக்கம்!

எடை குறைக்க சியா நீரா? சீரக நீரா? எது சிறந்தது என்று தெரியவில்லையா? மருத்துவர் சம்ரீன் பாரூக் கூறிய சியா நீர், சீரக நீர் ஆரோக்கிய நன்மைகள், குடிக்கும் முறைகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய வேகமான வாழ்க்கையில் அனைவரும் ஆரோக்கியமான உடல் எடையைப் பெற விரும்புகிறார்கள். உடற்பயிற்சி, உணவுமுறை, கலோரி கணக்கு என அனைத்தையும் கவனித்தாலும், சில எளிய சமையலறை பொருட்களும் எடை இழப்பில் பெரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சியா விதை நீர் மற்றும் சீரக நீர் அதிகம் பேசப்படுகின்றன. இவற்றில் எது சிறந்தது என்று டெல்லி மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவ மற்றும் பீரியாட்ரிக் டயட்டீஷியன் டாக்டர் சம்ரீன் பாரூக் விளக்கமளித்துள்ளார்.

சியா நீர் சிறப்பம்சங்கள்

சியா விதைகள் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. தண்ணீரில் ஊறவைத்தால் ஜெல் போல மாறி, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகின்றன.

how-to-make-korean-chia-seed-face-mask-01

நன்மைகள்

* 34% நார்ச்சத்து கொண்டதால், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

* ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து எடை இழப்புக்கு உதவுகின்றன.

* புரதம் தசை வளர்ச்சிக்கு உதவி செய்து வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது.

குடிக்கும் முறை

1 டீஸ்பூன் சியா விதைகளை 1 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் காலியான வயிற்றில் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்புக்கு இரவில் சாதம் சாப்பிடலாமா.? உணவியல் நிபுணர் விளக்கம்..

சீரக நீர் சிறப்பம்சங்கள்

சீரகம் ஒவ்வொரு சமையலறையிலும் உள்ள பொதுவான மசாலாப் பொருள். சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் செரிமானத்தை மேம்படுத்துகிறது, நச்சுகளை நீக்குகிறது.

நன்மைகள்

* வயிற்று வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கலை நீக்குகிறது.

* வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கலோரி எரிப்பை அதிகரிக்கிறது.

* இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை தருகின்றன.

1

குடிக்கும் முறை

1 டீஸ்பூன் சீரகத்தை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி சூடாவதும் குளிராததும் குடிக்கலாம்.

மருத்துவர் பரிந்துரை

பசியைக் கட்டுப்படுத்த விரும்பினால் சியா நீர் சிறந்தது. செரிமானத்தை விரைவுபடுத்த விரும்பினால் சீரக நீர் சிறந்தது. மருத்துவர் பரிந்துரையின்படி, காலை சீரக நீர், பகலில் சியா நீர் என மாற்றி மாற்றிக் குடித்தால், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம், நீரேற்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து எடை இழப்பை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

பக்கவிளைவுகள்

சியா விதைகளை அதிகம் எடுத்தால் வாயு, வீக்கம் ஏற்படலாம். சீரக நீர் அதிகமாக எடுத்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எந்த நீரையும் தொடங்குவதற்கு முன் ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது அவசியம்.

இறுதியாக..

சியா நீரும் சீரக நீரும் தனித்தனியான ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை. எடை இழப்பில் ஒன்றை மட்டுமே நம்பாமல், சமநிலையான உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்களோடு இணைத்துக் கொண்டால் சிறந்த விளைவுகளைத் தரும்.

Disclaimer: இந்த கட்டுரை பொது ஆரோக்கியத் தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது மருத்துவ ஆலோசனையாகாது. எடை இழப்புக்கு முன் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.

Read Next

எடை இழப்புக்கு இரவில் சாதம் சாப்பிடலாமா.? உணவியல் நிபுணர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 05, 2025 14:09 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content