Expert

பெண்கள் டயட் இருக்கும் போது செய்யும் 5 தவறுகள் இதோ.. அதை சரி செய்ய உதவும் குறிப்புகள்

What are some common mistakes people make when trying to lose weight: பெண்கள் டயட் பின்பற்றும் போது சில தவறுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இவை பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதில், பெண்கள் டயட் இருக்கும் போது செய்யக்கூடாத தவறுகளையும், அதை சமாளிக்க உதவும் குறிப்புகளையும் ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பெண்கள் டயட் இருக்கும் போது செய்யும் 5 தவறுகள் இதோ.. அதை சரி செய்ய உதவும் குறிப்புகள்


Top common food mistakes women make during dieting: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்சனையும் அடங்குகிறது. பொதுவாக, உடல் எடை அதிகரிப்பைக் குறைப்பதற்கு பலரும் பல்வேறு விதமான முயற்சிகளைக் கையாள்கின்றனர். ஆண்கள், பெண்கள் என அனைவருமே உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான டயட் முறைகளைப் பின்பற்றுவது என பல வழிகளைக் கையாள்வதற்கு முயற்சி செய்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கையாள்வதற்கான முக்கிய செயல்முறைகளில் டயட்முறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதிலும் குறிப்பாக, பெண்கள் தங்களது டயட்டில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பெண்கள் டயட்முறையைக் கையாள்வதாக இருப்பினும், சில சமயங்களில் முக்கியமான விஷயங்களை மறக்கின்றனர். ஆம். உண்மையில் அவர்கள் தங்களது உணவுமுறையில் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள் அவர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதில் பெண்கள் டயட் இருக்கும் போது செய்யும் சில தவறுகள் குறித்தும், அதைக் சரி செய்வதற்கான குறிப்புகள் குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: வெயிட் லாஸ்க்கு இந்த டயட்டை ஃபாலோ பண்றீங்களா? ரொம்ப ஆபத்து.. உடனே நிறுத்துங்க

பெண்கள் டயட் இருக்கும் போது செய்யும் தவறுகள்

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்களின் கூற்றுப்படி, உணவு கட்டுப்பாடு பெரும்பாலும் உடற்தகுதிக்கான குறுக்குவழியாகக் கருதப்படுகிறது. ஆனால் பல பெண்கள் அறியாமலேயே முன்னேற்றத்தை மெதுவாக்கும் மற்றும் நீண்டகால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தவறுகளைச் செய்கிறார்கள். இன்று நீங்கள் பின்பற்றக்கூடிய மிகவும் பொதுவான சில சிறந்த திருத்தங்கள் இங்கே என தனது பதிவைத் தொடங்கியுள்ளார்.

குறைந்த கலோரி அல்லது டயட் உணவுகளை நம்பியிருப்பது

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு சிற்றுண்டிகள் பெரும்பாலும் சர்க்கரைகள், சோடியம் மற்றும் பசியைத் தூண்டும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை மறைப்பதாகக் கூறியுள்ளார். அதாவது எடையைக் குறைக்க குறைந்த கலோரிகள் நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்வு செய்வதாக இருப்பினும், பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டி வகைகளில் சோடியம், சர்க்கரை போன்றவை இருப்பதால் அவை பசியை அதிகரிப்பதாக அமைகிறது.

சரிசெய்ய உதவும் குறிப்புகள்

உணவு சிற்றுண்டிகளுக்குப் பதிலாக, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழு உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து கார்போஹைட்ரேட்டுகளையும் நீக்குவது

கார்போஹைட்ரேட்டுகளுடன் அதிக கலோரி உட்கொள்ளல் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். நிபுணரின் கூற்றுப்படி, “மிகக் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகள் ஆற்றலை வடிகட்டுகிறது. மேலும் இது உடலில் ஹார்மோன்களை சீர்குலைக்கின்றன, மேலும் மீட்பை பாதிக்கின்றன” என நிபுணர் கூறுகிறார்.

சரிசெய்ய உதவும் குறிப்புகள்

இந்த பிரச்சனையைச் சரி செய்வதற்கு, அன்றாட உணவில் தினை, ஓட்ஸ், பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முழு கார்போஹைட்ரேட்டுகளையும் மிதமாகச் சேர்ப்பது நன்மை பயக்கும்.

ஆரோக்கியமான கொழுப்புகளைத் தவிர்ப்பது

பெரும்பாலான பெண்கள் டயட் முறைகளைப் பின்பற்ற விரும்பி, ஆரோக்கியமான கொழுப்புகளைத் தவிர்க்கின்றனர். அவ்வாறே, நிபுணர், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்கள், நட்ஸ் மற்றும் விதைகளைத் தவிர்ப்பது உடலில் இருந்து அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைத் தவிர்க்கிறது என நிபுணர் கூறுகிறார்.

சரிசெய்ய உதவும் குறிப்புகள்

இந்த தவறைச் சரி செய்வதற்கு, உணவில் ஆளி விதைகள், சியா, பாதாம் மற்றும் வால்நட்ஸ்களைச் சேர்க்கலாம். இவை ஹார்மோன், சருமம் மற்றும் திருப்திக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: எடை குறைக்கணும்... ஆனா சோம்பேறித்தனமா இருக்கா.. உக்காந்துகிட்டே உடம்பை குறைக்க அட்டகாசமான டிப்ஸ் இங்கே..

தவறான உணவுமுறை அல்லது உணவைத் தவிர்ப்பது

திட்டமிடாமல் உணவைத் தவிர்ப்பதன் காரணமாக அதிகப்படியான உணவு, மன அழுத்த ஹார்மோன் அதிகரிப்பு மற்றும் மோசமான வளர்சிதை மாற்றம் போன்றவை ஏற்படுவதாக நிபுணர் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

சரிசெய்ய உதவும் குறிப்புகள்

இதை சரிசெய்வதற்கு சீரான இடைவெளியில் சமச்சீரான உணவை கடைபிடிக்க வேண்டும்.

நுண்ணூட்டச்சத்துக்களைப் புறக்கணிப்பது

நிபுணரின் கூற்றுப்படி, கலோரிகள் மற்றும் மேக்ரோக்களில் மட்டுமே கவனம் செலுத்துவது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் இடைவெளிகளை ஏற்படுத்துகிறது என பகிர்ந்துள்ளார்.

சரிசெய்ய உதவும் குறிப்புகள்

கீரைகள், விதைகளை அதிகமாக உட்கொண்டு ஊட்டச்சத்து அளவைக் கண்காணிக்க வேண்டும்.

எல்லா டயட்டிற்கும் ஒரே உணவுமுறையைப் பின்பற்றுவது

உடல் எடை குறைப்பிற்கு நிறைய டயட் முறைகள் பங்களிக்கின்றன. ஆனால், அனைத்து டயட் முறைகளிலும் ஒரே உணவுமுறையைப் பின்பற்றும் போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதுடன், உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கலாம்.

சரிசெய்ய உதவும் குறிப்புகள்

இந்த தவறைச் சரி செய்வதற்கு உங்க உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற டயட்டைக் கையாள வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் தனித்துவமானது. எனவே உணவுமுறையும் அப்படித்தான் இருக்க வேண்டும். என நிபுணர் பகிர்ந்துள்ளார்.

உண்மையான உணவுக்கட்டுப்பாடு என்பது கட்டுப்பாடுகள் அல்லது போக்குகளைப் பற்றியது அல்ல. இது சமநிலை, ஊட்டச்சத்து மற்றும் தனிப்பயனாக்கம் பற்றியது எனக் குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: IBS பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ்

Image Source: Freepik

Read Next

20 நாள்களுக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்து பாருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

Disclaimer