Expert

எடை குறைக்கணும்... ஆனா சோம்பேறித்தனமா இருக்கா.. உக்காந்துகிட்டே உடம்பை குறைக்க அட்டகாசமான டிப்ஸ் இங்கே..

எடை குறைக்க ஆசையா? ஆனால் ஜிம்முக்கு போக சோம்பேறித்தனமா இருக்கிறீங்களா? கவலை வேண்டாம்! சோம்பேறிகளுக்கே பொருத்தமான எடை குறைக்கும் அட்டகாசமான டயட் டிப்ஸ்கள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
எடை குறைக்கணும்... ஆனா சோம்பேறித்தனமா இருக்கா.. உக்காந்துகிட்டே உடம்பை குறைக்க அட்டகாசமான டிப்ஸ் இங்கே..


“எடை குறைக்கணும்” என்று நினைப்பவர்களுக்கே சோம்பேறித்தனம் ஒரு பெரிய தடையாக இருக்கும். தினமும் ஜிம் போக முடியவில்லை, exercise செய்ய விருப்பமில்லை, அப்படின்னா எடை குறையுமா என்று பலர் கேட்பது உண்டு. அதற்கேற்ப தான் டாக்டர்களும் நியூட்ரிஷனிஸ்ட்களும் சொல்லும் டயட் டிப்ஸ்கள் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

சோம்பேறிகளுக்கே பொருத்தமான Weight Loss Tips

அதிகம் தண்ணீர்

நம் உடம்பில் இருக்கும் unwanted fat-ஐ வெளியேற்றுவதற்கு தண்ணீருக்கு மாற்று எதுவும் இல்லை. காலையிலேயே வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து குடித்தால் metabolism வேகமாகும். தினமும் 3–4 லிட்டர் தண்ணீர் குடித்தாலே உடல் எடை குறைய உதவும்.

சாதம் குறைவு.. காய்கறிகள் அதிகம்..

சோம்பேறிகளுக்கு சமைப்பது பிடிக்காது. ஆனால் ஒரு ப்ளேட் சாலட் செய்து சாப்பிடுவது சுலபம். வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, பீட்ரூட் போன்றவை எடை குறைக்க நல்ல துணை. சாதத்தை குறைத்து, காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.

artical  - 2025-08-19T134642.211

Soft Drinks வேண்டாம்..

சாதாரணமாக சோம்பேறிகள் soft drinks அதிகம் குடிப்பார்கள். ஆனால் அது எடை அதிகரிக்க காரணம். அதற்கு பதில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் மோர், பால் போன்றவை குடித்தால் எடை குறைப்பு சாத்தியம்.

இரவில் லைட் டின்னர்

இரவு நேரம் அதிகம் சாப்பிடுவது தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். சோம்பேறிகளும் கூட “ஒரு ப்ளேட் சப்பாத்தி + சாலட்” மாதிரி லைட் டின்னர் சாப்பிட்டால், எடை குறைப்பு வேகமாகக் கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: சுவையாவும் சாப்பிடனும்.. உடம்பும் குறையனுமா.? இந்த கொரிய உணவுகளை உண்ணுங்கள்.!

நட்ஸ் & சீட்ஸ் – எளிதான ஸ்நாக்ஸ்

சோம்பேறிகளுக்குப் பருப்பு, வேர்க்கடலை, பாதாம், சியா சீட்ஸ் போன்றவை எடை குறைக்கும் மாஜிக் உணவுகள். cooking இல்லாமல் சுலபமாக சாப்பிடலாம்.

இரண்டு வேளை பாஸ்டிங் முறையை பின்பற்றவும்

Intermittent fasting என்பது சோம்பேறிகளுக்கு மிகச் சிறந்த வழி. 16 மணி நேரம் எதையும் சாப்பிடாமல், 8 மணி நேரத்தில் மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றினால் உடல் எடை குறையும்.

ஹெர்பல் டீ குடிக்கவும்

Green tea, ginger tea, lemon tea போன்ற ஹெர்பல் டீக்கள் எடை குறைக்க உதவும். exercise செய்யாமல் கூட metabolism-ஐ active-ஆக வைத்துக் கொள்கிறது.

artical  - 2025-08-19T134758.236

சோம்பேறிகளுக்கான Weight Loss Hack

* டிவி பார்க்கும்போது junk food சாப்பிடுவதை தவிர்த்து cucumber, carrot sticks சாப்பிடலாம்.

* லிப்ட்-க்கு பதில் படிக்கட்டில் ஏறி இறங்குவது கூட எடை குறைக்க உதவும்.

* சாப்பிடும்போது மெதுவாக மென்று சாப்பிடும் பழக்கம் இருந்தால் overeating குறையும்.

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை

எடை குறைப்பது சோம்பேறிகளுக்குப் ப்ராப்ளம் இல்ல. ஆனால் சரியான diet பின்பற்றாமல் crash diet, fasting போவது health-க்கு ஆபத்தானது. அதனால் balanced food தான் முக்கியம் என்று நியூட்ரிஷனிஸ்ட் டாக்டர் சரண்யா தெரிவித்தார்.

இறுதிச் சொல்

சோம்பேறிகள் உடல் எடையை குறைக்கவே முடியாது என்று சொல்ல முடியாது. உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள், தண்ணீர் அதிகம் குடிப்பது, சாலட் மற்றும் ஹெல்தி snacks சாப்பிடுவது போன்ற எளிய வழிகள் மூலமே உடல் எடை குறையலாம். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்குக் கூட இந்த டிப்ஸ் அட்டகாசமான ரிசல்ட் தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read Next

பேராபத்து மக்களே.. Fit-ஆ இருக்கனும்னு Steroid யூஸ் பண்ணுறீங்களா.? இது தெரிஞ்சா தொடவே மாட்டீங்க.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்