What happens after 2 weeks of no sugar: இனிப்பு நிறைந்த உணவுகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களது உணவில் சர்க்கரை சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மோசமான பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், சர்க்கரை நிறைந்த இனிப்புகள், தின்பண்டங்கள், உணவுகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு வகையான நாள்பட்ட நோய்களை உருவாக்குகிறது.
இது போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபட நாம் கட்டாயம் சர்க்கரையைத் தவிர்ப்பது அவசியமாகும். இதற்கு பலரும் சர்க்கரையைத் தவிர்ப்பதற்கு சவால்களை எடுத்து வருகின்றனர். அவ்வாறே, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து 20 நாள்களுக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
20 நாள்களுக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருக்கும் போது கிடைக்கும் நன்மைகள்
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள், “சர்க்கரையை குறைப்பது (பழங்களிலிருந்து இயற்கையான சர்க்கரை அல்ல) 2-3 வாரங்களில் பெரிய மாற்றங்களைத் தூண்டுகிறது” என தனது பதிவைத் தொடங்கியுள்ளார். இதில் 20 நாள்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருக்கும் போது கிடைக்கும் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ள தகவல்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: No Sugar Diet: இரண்டு வாரங்களுக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால்... உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன தெரியுமா?
கல்லீரல் ஆரோக்கியம்
நிபுணரின் கூற்றுப்படி, “20 நாள்கள் தொடர்ந்து சர்க்கரை சாப்பிடாமல் இருக்கும் போது கல்லீரல் கொழுப்பைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், ALT அளவைக் குறைப்பது” போன்ற அனைத்துமே கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியதாகும்.
அன்றாட உணவில் சர்க்கரையைத் தவிர்ப்பது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைத்து, ஆரோக்கியமற்ற கொழுப்பு கல்லீரல் நோய் வருவதைத் தடுக்கிறது. ஏனெனில், அதிகப்படியான சர்க்கரை குளுக்கோஸாக மாற்றப்பட்டு, அது கொழுப்பாக கல்லீரலில் சேமிக்கப்பட்டு, கல்லீரல் சேதத்திற்கு வழிவகுக்குகிறது. இந்நிலையில், சர்க்கரையை குறைப்பது எடை இழப்புக்கு உதவுவதன் மூலம், கல்லீரல் கொழுப்பு படிவதை குறைக்கிறது.
வளர்சிதை மாற்றம்
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, சர்க்கரையைத் தவிர்ப்பது, “உண்ணாவிரத இன்சுலின் அளவைக் குறைக்கவும், கொழுப்பு எரியும் வேகத்தை அதிகரிக்கவும், உடல் சர்க்கரை சார்பிலிருந்து கொழுப்பு ஆக்சிஜனேற்றத்திற்கு மாறுவதற்கும் உதவுகிறது” எனக் கூறுகிறார்.
சர்க்கரையைத் தவிர்க்கும் போது, குறிப்பாக, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளைக் குறைப்பது, கொழுப்பு சேமிப்பதைக் குறைக்கிறது. மேலும் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைக் குறைக்கலாம். இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
குடல் சமநிலைக்கு
சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம் நுண்ணுயிர் பன்முகத்தன்மையை மேம்படுத்துவது, வீக்கத்துடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள் குறைவது மற்றும் SCFAகள் (குடல்-குணப்படுத்தும் சேர்மங்கள்) அதிகரிக்கிறது உள்ளிட்ட நன்மைகளைப் பெறலாம் என நிபுணர் பகிர்ந்துள்ளார்.
சர்க்கரை சாப்பிடாமல் இருக்கும் போது குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் குடல் சுவரைப் பாதுகாக்கவும், குடல் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, குடலில் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி பாருங்க.. உங்க ஸ்கின் மட்டுமல்ல முடியும் ஆரோக்கியமா இருக்கும்
மூளை மற்றும் நல்ல மனநிலைக்கு
BDNF (மூளை வளர்ச்சி காரணி) அதிகரிப்பது, தெளிவு, நினைவாற்றல் மற்றும் மனநிலையை அதிகரிப்பது மற்றும் சர்க்கரை பசியை மறைப்பது போன்ற பல்வேறு நன்மைகளை சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம் பெறலாம்.
சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கலாம். இவை மூளையில் செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக்கடத்திகளை சீராக பராமரிக்கிறது. இதன் மூலம் நினைவாற்றல், மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். மேலும் மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்கலாம்.
View this post on Instagram
சருமத்திற்கு நன்மை தர
சர்க்கரையைத் தவிர்ப்பது முகப்பருவைக் குறைக்கவும், நீரேற்றத்தை மேம்படுத்தவும், AGEகளைக் குறைப்பதன் மூலம் தோல் வயதானதைக் குறைக்கவும் உதவுவதாக நிபுணர் பகிர்ந்துள்ளார்.
சர்க்கரை சாப்பிடுவதைக் குறைப்பது சருமத்திற்குத் தேவையான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. இவை சருமத்தில் முகப்பருவைக் குறைக்கவும், சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைக்கவும், சருமத்தை இளமையாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
தூக்கம் மற்றும் ஆற்றலைப் பெற
நிபுணரின் கூற்றுப்படி, தொடர்ந்து 20 நாள்களுக்கு சர்க்கரையைத் தவிர்ப்பது கார்டிசோல் மற்றும் மெலடோனினை நிலைப்படுத்தவும், ஆழ்ந்த மற்றும் அதிக நிதானமான தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
சர்க்கரை சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கலாம். இதன் மூலம் உடலில் ஆற்றல் மட்டும் சீராக வைத்திருக்க உதவுகிறது. இவை சோர்வைக் குறைப்பதுடன், நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
குறிப்பு
ஊட்டச்சத்து நிபுணர், “20 சர்க்கரை இல்லாத நாட்கள் = ஆரோக்கியமான கல்லீரல், கூர்மையான மனம், தெளிவான சருமம், சிறந்த தூக்கம் மற்றும் நிலையான ஆற்றல்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை இல்லாமல் 14 நாட்கள்... உங்கள் முகம் எப்படி மாறும் தெரியுமா? மருத்துவர் விளக்கம்..
Image Source: Freepik