காலை எழுந்ததும் உடனடியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், எல்லா உணவுகளும் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தவை அல்ல என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன். சில உணவுகள் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், அமிலத்தன்மை, குமட்டல், வாயுத்தொல்லை, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 5 உணவுகள்
1. பிளாக் டீ / காப்பி (அதிகமாக)
காலை எழுந்ததும் பலருக்கும் தேநீர் அல்லது காப்பி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் அதிக அளவில் எடுத்துக்கொண்டால், அமில சுரப்பை அதிகரித்து வயிற்று சுவரை எரிச்சலடையச் செய்யும். இதனால் அமிலத்தன்மை, உப்புசம், வயிற்று எரிச்சல் போன்றவை ஏற்படும்.
2. எண்ணெய் அதிகம் உள்ள பொரியல் உணவுகள்
வெறும் வயிற்றில் பொரியல், பஜ்ஜி, வடை போன்றவை சாப்பிட்டால், அது ஜீரணத்துக்கு மிகவும் சிரமமாகும். இந்த உணவுகள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் காரணமாக வயிற்றில் கனத்த உணர்வு, குமட்டல், வாயுத்தொல்லை ஏற்படும்.
இந்த பதிவும் உதலாம்: குடல் ஹெல்தியாக இருக்க நிபுணர் சொன்ன இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க..
3. பழங்கள் (அதிகமாக)
பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்றாலும், வெறும் வயிற்றில் அதிக அளவு சாப்பிடுவது நல்லது அல்ல. இதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகமாக ஜீரணத்தை தூண்டி அமில பிரச்சினை, வாயுவேற்று, உப்புசம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
4. பேக்கரி உணவுகள்
பன்கேக், டோனட், கேக், பன் போன்ற பேக்கரி உணவுகள் மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய் நிறைந்தவை. இவற்றில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், ஜீரண கோளாறு, அதிக பசி, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
5. சூடான பால்
பலர் காலை எழுந்ததும் சூடான பால் குடிக்கும் பழக்கம் உடையவர்கள். ஆனால், வெறும் வயிற்றில் பால் குடித்தால், அது ஜீரணத்திற்கு கடினமாகி, குமட்டல் அல்லது வாந்தி உணர்வு ஏற்படுத்தும்.
View this post on Instagram
ஆரோக்கியமாக தொடங்க என்ன சாப்பிடலாம்?
வெறும் வயிற்றில் உடலுக்குப் பாதிப்பு இல்லாமல், இலகுவாக ஜீரணமாகும் உணவுகள் எடுக்க வேண்டும்.
* சூடான தண்ணீர் / இன்ப்யூஸ் வாட்டர் – உடல் சுத்தமாகும்.
* நன்கு ஊறவைத்த பாதாம், வால்நட் – மூளை மற்றும் உடலுக்கு ஆற்றல்.
* தேங்காய் எண்ணெய் அல்லது நெய் (சிறிதளவு) – ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* ஹெர்பல் டீ – அமிலம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும்.
* இலகுவான காலை உணவு – இட்லி, உப்மா, ஓட்ஸ் போன்றவை சிறந்தவை.
நிபுணரின் கருத்து
காலை உணவு நாளின் மிக முக்கியமான உணவு. ஆனால், அதை சரியாக தேர்வு செய்வது அவசியம். வெறும் வயிற்றில் தவறான உணவுகளை எடுத்தால், நாள் முழுவதும் உடல்நிலை பாதிக்கப்படும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன்.
இறுதியாக..
காலை வெறும் வயிற்றில் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்துகொள்வது மிக முக்கியம். தவறான உணவுகள் உடலின் ஜீரண செயல்முறையை பாதித்து, நாள் முழுவதும் சோர்வை ஏற்படுத்தும். அதனால், சிறிய மாற்றங்கள் செய்து, ஆரோக்கியமான உணவுகள் மூலம் நாளைத் தொடங்குங்கள்.
{Disclaimer: இந்தக் கட்டுரை ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரனின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொது மருத்துவ விழிப்புணர்வுக்காக மட்டுமே. எந்த மாற்றங்களையும் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.}