Breakfast Tips: ஆரோக்கியமாக இருக்க காலையில் காலை உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். காலை உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால், அது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் சில நேரங்களில் சிலர் காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள் அல்லது காலை உணவின் போது சில தவறுகளைச் செய்வார்கள். இந்த தவறுகள் உடல் எடை முதல் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.
எந்தவொரு நபரும் ஆரோக்கியமாக இருக்க, காலை உணவை ஒருபோதும் தவிர்க்காமல், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தனது காலை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சில காலை உணவுகள் ஆரோக்கியமான தொடக்கத்திற்கு சிறந்த தேர்வாக இருக்காது என்பதை அறிந்திருக்க வேண்டியது முக்கியம். எத்தகைய காலை உணவுகளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என பார்க்கலாம்.
மேலும் படிக்க: இரும்பு போல வலுவான எலும்பு வேணுமா? மருத்துவர் சொல்லும் குறிப்புகள் இதோ!
காலையில் சாப்பிடவேக் கூடாத காலை உணவுகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் அதிகமாக இருக்கும். இதை அதிகமாக உட்கொள்வது என்பது இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உட்கொள்ளவேக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்மூத்திகள்
பெரும்பாலானோர் காலை உணவை ஆரோக்கியமானதாக தேர்ந்தெடுக்கிறோம் என்ற பெயரில் ஸ்மூத்திகளை உட்கொள்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு சிறந்ததுதான் என்றாலும், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட அல்லது கடையில் வாங்கப்பட்ட ஸ்மூத்திகள் உட்கொள்வது நல்லதல்ல. ஆனால் இதில் சர்க்கரை அதிகமாக இருக்கலாம், அதேபோல் முழு பழங்களில் காணப்படும் நார்ச்சத்து இதில் இல்லாமல் இருக்கலாம். ஸ்மூத்திகள் ஆரோக்கியமானதுதான் என்றாலும் அதை வீட்டிலேயே தயாரித்து குடிப்பதுதான் நல்லது.
அதிக சர்க்கரை பழச்சாறுகள்
முன்னதாக கூறியது போலவே கடைகளில் நேரடியாக வாங்கப்படும் பழச்சாறுகளில் முழு பழங்களில் காணப்படும் நார்ச்சத்து இல்லாமல் சர்க்கரையின் செறிவு அதிகமாக இருக்கக்கூடும். புதிய, முழு பழங்களைத் தேர்வுசெய்யவும், அதேபோல் சர்க்கரைகள் சேர்க்காமல் உங்கள் வீட்டிலேயே பழச்சாறுகளை தயாரிக்கவும்.
காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடக் கூடாது
பலர் தங்கள் உணவில் ஆரோக்கியமான காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் அடிக்கடி சேர்த்துக் கொள்கிறார்கள், ஆனால் உண்மையில், காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கார்ன்ஃப்ளேக்ஸ் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் அதிக அளவு சர்க்கரையைக் கொண்டுள்ளது.
இது உங்கள் உடலில் ஆரோக்கியமற்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற காலை உணவை சாப்பிட்ட பிறகு, நீங்கள் உடனடியாக சோம்பலாக உணரலாம் மற்றும் மீண்டும் பசியை உணரலாம்.
மேலும் படிக்க: Triphala Churna: உடலில் நம்பமுடியாத மாயாஜாலம் செய்யும் திரிபலா சூர்ணம்.. நம்பமுடியாத 8 நன்மைகள்!
வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
- பலர் காலை உணவுக்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தங்கள் அன்றாட பணிகளை நோக்கி செல்கிறார்கள்.
- பால் காலை உணவின் முக்கிய அங்கமாகிவிட்டது.
- ஆனால் அது எல்லா மக்களுக்கும் பொருந்தாமல் போகலாம்.
- சிலருக்கு, காலை உணவில் பால் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்
- பலர் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பார்கள். உண்மையில் இது செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும்.
- இது மட்டுமல்லாமல், ஹார்மோன் சமநிலையின்மை உள்ளவர்களுக்கு, பால் முகப்பரு வெடிப்பு பிரச்சனையை அதிகரிக்கலாம்.
- அதேபோல் PCOS (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) போன்ற நிலைமைகளை மோசமாக்கும்.
பாலில் உள்ள ஹார்மோன்களும், அதன் லாக்டோஸ் உள்ளடக்கமும், உங்கள் உடலின் இயற்கையான ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து மனநிலை ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
pic courtesy: freepik